சாட்சி சொல்ல வந்த மயூ, அதிர்ச்சியில் ராதிகா, காப்பாற்ற படுவாரா ஈஸ்வரி? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
532
- Advertisement -

ஈஸ்வரியை காப்பாற்ற பாக்கியா எடுத்த கடைசி அஸ்திரம் குறித்த பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டி இருந்தார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று இருந்தார். அதற்கு பின் வீட்டில் கலவரங்கள் நடந்தது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கடந்த வாரம், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். அதே சமயம் ராதிகா அம்மா, கோபி எல்லோரும் ஈஸ்வரியை தான் திட்டி இருந்தார்கள். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார். இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருந்தார் ஈஸ்வரி. இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார்.

ஈஸ்வரி கைது:

இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. இதனால் மொத்த குடும்பமும் உடைந்து விட்டது. இன்னொரு பக்கம் ராதிகா, கமலா மீது கோபி பயங்கரமாக கோபப்படுகிறார். மேலும், நீதிமன்றத்தில் ஈஸ்வரி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அழுகிறார். அதை அடுத்து ராதிகா, கோபியிடம் விசாரித்தார்கள். எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருக்கிறது. இதனால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா குடும்பம் திகைத்துப் போய் நின்றது. அப்போது பார்க்கில் இருந்த மயூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார்.

-விளம்பரம்-

கோர்ட் விசாரணை:

ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற தான் சென்றார். அதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். மேலும், நேற்று எபிசோடில் கோபி, ராதிகா அவருடைய அம்மாவை பயங்கரமாக திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அதற்கு அவர்கள் போகமாட்டோம், இங்கு தான் இருப்போம் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் கோர்ட்டில் ஈஸ்வரி கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதனால் எல்லோருமே கோர்ட்டுக்கு வந்து விட்டார்கள். ஆனால், பாக்யா மட்டும் வரவில்லை. எங்கு போனார் என்று தெரியவில்லை.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நீதிமன்றத்தில், ஈஸ்வரி தான் ராதிகாவை தள்ளிவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் சரியாக இருக்கிறது. இதனால் ஈஸ்வரிக்கு தண்டனை வழங்கப்படும் என்று சொல்கிறார். அந்த சமயத்தில் பாக்கியா, கோர்டுக்கு மயூவை அழைத்துக்கொண்டு வருகிறார். இதை பார்த்து ராதிகா, கமலா எல்லோருமே ஷாக் ஆகி விடுகிறார்கள். கூண்டில் ஏறிய மயூ உண்மையை சொல்வாரா? ஈஸ்வரி விடுதலையாகுவாரா? ராதிகா என்ன செய்யப் போகிறார்? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement