விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி ‘ சீரியலில் நடனப் போட்டியில் செலக்ட் ஆகி விட்டதால் அனைவரும் சந்தோஷப்பட்டு இனியாவை பாராட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி வைத்த நபர், பாக்யாவின் ஆர்டரை கெடுக்க திட்டம் போட்டார். பாக்கியா, தான் சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரியை அழைக்க. அவர் வர மறுத்தார். இருந்தும் பாக்கியா விடாமல் ஈஸ்வரியை கட்டாயப்படுத்தி ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வைத்தார். பின் இந்த ஆர்டரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று புது செப் சதி வேலைகள் செய்தார்.
இன்னொரு பக்கம் பணம் இல்லாததால் வீட்டு செலவிற்கு ரொம்பவே அமிர்தா- எழில் கஷ்டப்படுகிறார்கள். உடனே அமிர்தாவின் அம்மா, உங்களிடம் பணம் இல்லையா? நான் வாங்கி தரட்டுமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம் என்று அமிர்தா சமாளித்தார். அப்போது எழில், எப்படியோ பணத்தை ரெடி பண்ணி வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வந்தார். கடந்த வாரம் பாக்கியா தன்னுடைய புதிய ஆர்டர் கான வேலைகளை சிறப்பாக முடித்து விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் வந்த ஆர்டர்களை எல்லாம் பாக்கியா நல்லபடியாக முடித்து அனுப்பி விட்டார். ரெஸ்டாரண்டிலும் பயங்கர கூட்டமாக இருந்தது. அப்போது ஒருவர், சாப்பாடு எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று கடையில் சாப்பாட்டை கொட்டி ஒரே பிரச்சனை செய்தார். இவரை தொடர்ந்து அன்று சாப்பாடு வாங்கிய எல்லோரும், கெட்டு போன சாப்பாடு என்று பாக்யாவிடம் சண்டைக்கு போனார்கள். பாக்யாவிற்கு என்ன நடக்கிறது? என்ன சொல்வது? என்று புரியாமல் இருந்தார். ஆனால், அந்த செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
உடனே கோபி, பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்து விவாதம் செய்தார்கள். பின் அதிகாரிகள் பாக்யாவின் ரெஸ்டாரண்டை சோதனை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் உண்மையறிந்து ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே பதட்டப்படுகிறார்கள். பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் மக்கள் எல்லோருமே ஆவேசமாக கொந்தளித்து கத்துகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தை அறிந்து மொத்த குடும்பமே வேதனைப்படுகிறது. கடைக்கு வந்த செழியன், எல்லோரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் எழிலுக்கும் இந்த விஷயம் தெரிந்து கடைக்கு வந்து எல்லோரிடமும் பேசுகிறார். ஆனால், யாருமே இவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாக்கியா, நான் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். எனக்கு டைம் கொடுங்கள் என்று அவர்களிடம் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டை சோதனை செய்கிறார்கள். அப்போது கெட்டுப்போன பொருட்களை வைத்து சமைத்தது தெரிய வந்திருக்கிறது. இதை பாக்கியாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி ஆகிறார். உடனே பாக்கியா, நான் அப்படி சமைக்க வில்லை என்று சொல்லியுமே உணவுத்துறை அதிகாரிகள் கேட்கவே இல்லை. பின் பாக்கியாவின் ரெஸ்டாரன்ட்டுக்கு 50,000 பைன் போட்டு கடைக்கு சீல் வைப்பதாக சொல்கிறார்கள். இதனால் எல்லோருமே அதிர்ச்சியானார்கள் இருக்கிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.