அட, பாக்கிலக்ஷ்மி ராதிகாவின் கணவரை பார்த்துள்ளீர்களா ? திருமணமாகி இத்தன வருஷம் ஆகுதாம்.

0
5283
jeni

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெனிபர். பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான்.

இதையும் பாருங்க : நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்ட சூர்யா – உயரத்தை கேலி செய்த BJP ஆதரவாளர். கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

- Advertisement -

நடிகை ஜெனிபர் ஆரம்பத்தில் ஒரு குரூப் டான்சராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஷாம் நடிப்பில் வெளியான ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ‘ படத்தில் இடம்பெற்ற யாமினி என்ற பாடலிலும் வந்து இருப்பார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் வந்த இவர் ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்தார். ஆனால், தொடர்ந்து இவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் தனது 15வது திருமண நாளை கொண்டாடி இருந்தார் ஜெனிபர். இவர், காசி விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கின்றார். சமீபத்தில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement