அடுத்து நடக்கப்போவது இதுதானா? – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் சதீஷ் குமார் போட்டுள்ள பதிவு

0
294
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ்குமார் போட்டு இருக்கும பதிவுதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி டிஆர்பி யில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகர் சதீஷ்குமார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலில் இந்த வாரம் கோபி பெயருக்கு கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதை பாக்கியா வாங்கி வைத்திருந்தார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் பாக்கியா அந்த கவரை கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தவுடன் கோபி ஷாக் ஆனார். அதில், ராதிகா கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். விவாகரத்து நோட்டீசை பார்த்தவுடன் கோபிக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் நெஞ்சை பிடித்துக் கொண்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

உடனே பாக்யா, ராதிகாவிற்கு போன் செய்தார். ஆனால், ராதிகாவின் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கோபி-பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதற்குப் பின் ராதிகா, வேறு ஒரு நம்பரில் இருந்து பாக்கியாவுக்கு போன் செய்து பேசினார். அப்போது பாக்கியா, எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள் என்று ராதிகாவிடம் கேட்க, நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். யாருக்காகவும் கவலைப்படாமல் இருங்க நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று ராதிகா பாக்யாவிடம் கூறியிருந்தார்.

சீரியல் ட்ராக்:

அப்போது, போனை கோபி வாங்கிப் பேச ராதிகா ஃபோனை கட் செய்தார். அதன்பின், கோபியை நினைத்து பாக்கியாவிடம் ஈஸ்வரி புலம்பி கொண்டிருக்கிறார். உடனே பாக்யா, முன்னாள் கணவரைநினைத்து வருத்தப்படும் அளவிற்கு நான் நல்லவள் கிடையாது என்று ஈஸ்வரிடம் கூறுகிறார். பின்,கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்புகிறார். அதன்பின் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடக்குமோ என புலம்ப, எதுவாக இருந்தாலும் அவர்களது முடிவு எதைப்பற்றியும் யோசிக்காதீர்கள் என்று பாக்கியா அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் கோர்ட்டில் கோபி, ராதிகாவை சந்தித்து சமாதானம் செய்கிறார். ஆனால், ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதன்பின், நீதிபதிஇருவரையும் அழைத்து விசாரிக்கிறார். அப்போது ராதிகா, நான் இனி கோபியுடன் வாழ விரும்பவில்லை. எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று கேட்டவுடன் கோபி அதிர்ச்சியாக நிற்கிறார். எனவே கோபி, ராதிகாவுக்காக பாக்யாவையும் விவாகரத்து செய்து விட்டார். தற்போது ராதிகாவும் விவாகரத்தை கேட்கிறார்.

சதீஷ் குமார் பதிவு :

அதோடு பாக்கியாவும் வீட்டை விட்டுப் போக கெடு கொடுத்து இருக்கிறார். அடுத்து கோபியின் நிலைமை என்ன என்பது போல் தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் தனதுஇன்ஸ்டாவில், ‘ராதிகா வீடும் இல்லை, பாக்கியா வெளியே போக சொல்லி ஆர்டர் போடப் போறா, எங்க போறது. நம்ம பெஸ்ட் பிரண்டு செந்தில் ஓட வீடு இருக்கே, வேண்டாம் இருக்கவே இருக்கேன் நம்ம Cloud Kitchen’ என பதிவு போட்டுள்ளார். தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ்குமாரின் இந்த பதிவுதான் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Advertisement