‘பொம்பளைங்க மட்டும் இப்படி இருக்கனுமா’ – பாரதி கண்ணம்மா சீரியலை Troll செய்த பாக்கியலக்ஷ்மி

0
265
baagyalakshmi
- Advertisement -

பாரதிகண்ணம்மா சீரியலை கிண்டல் செய்யத்தான் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு காட்சி வைத்தாரா? என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் இயக்கி வருகிறார். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை, சுயமரியாதை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதையும் பாக்கியா கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் பாக்கியா கோபியிக்கு விவாகரத்து கொடுத்து வருகிறார். அதற்கு பிறகு வீட்டிற்கு வரக்கூடாது என்று கோபி திட்டுகிறார். அதையும் மீறி கோபியின் வீட்டிற்கு வருகிறார் பாக்கியா. பின் கோபி தகாத வார்த்தைகளால் பாக்கியாவை திட்டுகிறார். ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோபியின் மொத்த குடும்பமே பாக்கியாவை நிற்க வைத்து கேள்வி கேட்டு இருக்கிறது. இதனை அடுத்து பாக்கியா என்ன செய்யப்போகிறார்? கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்புவரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி சீரியலின் புரோமோ :

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புரோமோ பாரதிகண்ணம்மா சீரியலை தாக்கி தான் இயக்குனர் எடுத்து இருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, பாக்கியலட்சுமி சீரியலின் புரோமோவில் பாக்கியா கோபியின் துணிகளை பெட்டியில் வைத்து விடுகிறார் இதை கோபி வெளியிடுகிறார் அப்போது கோபி, பாக்கியா பெட்டியை வெளியே போடுகிறார். ஆனால், அதில் கோபி துணி இருக்கிறது. பின் நான் ஏன் வெளியே போக வேண்டும்? நீங்க வெளியே போங்க. ஆம்பளைகள் தப்பு செய்வீங்க, ஆனால் பொம்பளைங்க எந்த தப்பும் செய்யாமல் அழுதுகிட்டே ரோட்டில் நிக்கனுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி பாக்யா கேட்பது பாரதி கண்ணம்மா சீரியலை சீண்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை பாரதி சந்தேகப்படுவதால் வீட்டைவிட்டு கண்ணம்மா தெரு தெருவாக நடந்து வெளியே செல்கிறார். இதை மையப்படுத்தி தான் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், சமீப காலமாகவே பாரதிகண்ணம்மா சீரியல் கொஞ்சம் டல்லாக சென்றுகொண்டிருக்கின்றது. இதனால் சீரியல் எப்போ முடிப்பீர்கள் என்று ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement