10 ஆம் வகுப்பில் திருமணம், தற்போது வீட்டில் நடைபெற்ற விஷேசம் – கம்பம் மீனா பகிர்ந்த புகைப்படம்.

0
2078
kambammeena
- Advertisement -

சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர்களில் சிலபேர் தான் தங்களுடைய வட்டார மொழியில் பேசுகிறார்கள். அந்த வகையில் கிராமப் பின்னணி கொண்ட கலைஞர்கள் சிலபேர் சீரியலில் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் வட்டார மொழி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கம்பம் மீனா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் கஸ்தூரி அத்தாச்சியாகவும், பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்காவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். தற்போது அவரைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. உண்மையிலேயே இவர் மிகவும் துணிச்சலான பெண். இவருடைய ரியல் லைப் ஸ்டோரி கேட்டால் பல பெண்களுக்கும் மோட்டிவேஷன் ஆக இருக்கும். அந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் போராடி இருக்கிறார். சின்ன கிராமத்திலிருந்து வந்த இவர் இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். வட்டாரமொழி பேச்சு தான் இவருடைய வெற்றிக்கு காரணம் என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

கம்பம் மீனாவின் நிஜப்பெயர் நாச்சிமுத்து மீனா. இவர் முதன்முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார்.இவருடைய சினிமா பயணத்தை தொடங்கி வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா தான். இதுவரை கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் கம்பம் மீனா நடித்து உள்ளார். ஆனால், அவரைப் பற்றி பலருக்கும் பெரியதாக தெரியாது. பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் கஸ்தூரி அத்தாச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.

தற்போது இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, தேன்மொழி பிஏ என பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.வாழ்க்கை என்பது என்ன என்று தெரிவதற்கு முன்னே இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. பின் கணவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக எல்ஐசி ஏஜென்ட் ஆக மாறினார். இளமையிலேயே தனது கடின உழைப்பால் உழைக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

பின் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெறகத்திபொண்ணு சீரியல் தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்தபோது கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிகை மீனா நடிக்க தேர்வானார். அங்கிருந்து தான் அவருடைய மொத்த வாழ்க்கையுமே மாறியது. மேலும், சமீபத்தில் தான் இவருடைய மகனுக்கு திருமணம் நடந்தது. சின்ன கிராமத்திலிருந்து வந்து இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே தன்னுடைய உழைப்பால் பயங்கரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார் கம்பம் மீனா.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் விழாவில் கூட இவருக்கு விருது கூட வாழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பதான் இவரது மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் மீனா. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்திருக்கும் மீனா இது தொடர்பான புகைப்படங்களை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement