மாற்றப்பட்ட பாபா படத்தின் அரசியல் Climax சீன் – படத்திற்காக ரஜினி பேசி இருக்கு புதிய வசனம். வைரலாகும் வீடியோ.

0
821
baba
- Advertisement -

20 ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்த பாபா படம் ரீ- ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெளியாகி இருக்கும் பாபா திரைப்படம் தற்போது திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. பாட்ஷா, அண்ணாமலை, வீரா என்று ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா 2002 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து பாபா படத்தை எடுத்து இருந்தார். ரஜினி, மனிஷா கொய்ராலா, சுஜாதா, கவுண்டமணி, நம்பியார் என்று பலர் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

அருணாச்சலம் படையப்பா ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து வெளியான பாபா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அந்த காலகட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றியடையவில்லை. இருப்பினும் ரஜினி அந்த படத்தில் பல அரசியல் வசனங்களை பேசி இருந்தது அப்போதுபெரும் சர்ச்சையாக இருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இன்றளவும் ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை பாபா திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் தான்.

2002ஆம் ஆண்டு வெளிவந்த பாபா படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்களிடம் செல்வதா அல்லது பாபாவிடம் செல்வதா என்று பாபாவை சந்தித்து ரஜினி ஆலோசனை செய்வார். அப்போது பாபா கூறிய அறிவுரையை ஏற்று ரஜினிகாந்த் மக்களிடம் செல்வது போல் சற்று அரசியல் கலந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த கிளைமாக்ஸ் காட்சியில் ‘உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்’ என்று பாடல் வரிகள் வந்த போது திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் ஆராவாரம் செய்து இருந்தனர். ஆனால், இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் அதை மொத்தமாக தூக்கிவிட்டு, மீண்டும் உன்னுடைய தாய் வயிற்றில் மறுஜென்மத்தில் பிறந்து உன் தாய்யின் அணைத்து ஆசைகளையும் நிறைவேற்று, அதன்பின் நானே உன்னை அழைத்து கொள்கிறேன் என்று ரஜினியிடம், பாபா கூறுகிறார். 

-விளம்பரம்-

அதற்க்கு முக்கிய காரணம் ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று பாபா வெளியான சமயத்தில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார் என்றும் நேர்மையான தலைவராக இருப்பார் என்றும் மக்கள் நினைத்து இருந்தார்கள். எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் பாபா படம் வெளியானதில் இருந்தே காத்துகொண்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், ஜனவரியில் கட்சி துவங்குவோம். மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும்.இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறி இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை குவித்து இருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ரஜினிகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றதோடு மட்டும் இல்லாமல் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டிருந்தார். இதற்கு பலருமே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.

ரஜினிகாந்த்தின் இந்த அறிவிப்பு அறிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்து இருக்கிறது. தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து அதே டிசம்பர் 3 ஆம் தேதி பாபா படத்தின் ரீ – ரிலீஸ் குறித்த பதிவு ஒன்றை ட்விட்டரில் போட்டு இருந்தார் ரஜினி. இதனால் அவர் 2020 ஆம் ஆண்டு போட்ட அரசியல் பதிவை குறிப்பிட்டு பலரும் கலாய்தனர். இப்படி ஒரு நிலையில் தான் பாபா படத்தின் கிளைமாக்ஸில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்து இருக்கின்றனர்.

Advertisement