பாபா படத்தின் டப்பிங்கை முடித்த ரஜினி – மீண்டும் டப்பிங் ஏன் தெரியுமா ? வெளியான சுவாரசிய காரணம்.

0
271
baba
- Advertisement -

புது பொலிவுடன் ரஜினி நடித்த பாபா படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ரஜினி நடித்த பாபா படம் மீண்டும் புது பொலிவுடன் ரிலீஸ் ஆக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த படம் பாபா.

-விளம்பரம்-

பாபா படம்:

அண்ணாமலை, பாட்ஷா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தான் பாபா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஹீரோவாக மட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரித்தும், கதை மற்றும் திரை கதையும் எழுதி இருந்தார். இதனாலே பாபா படம் தான் நடித்த படங்களிலேயே தனது மனதுக்கு நெருக்கமான படம் என்று பல பேட்டிகளில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார்.

பாபா ரீ-ரிலீஸ்:

ஆனால், படம் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை, வெற்றியும் அடையவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை ரீ- ரீலீஸ் செய்யும் பணிகளில் முழு வீச்சில் ரஜினிகாந்த் இறங்கி இருக்கிறார். அதாவது, இந்த படத்தை டிஜிட்டல் மயமாக்கி அதில் உள்ள சில காட்சிகளை நீக்கி புதுப்பொலிவுடன் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது. இதனால் சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி கொடுத்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement