23 வயது பெண்ணுடன் திருமணம் ? முதல் முறையாக மனம் திறந்த பப்லு. அவரே வெளியிட்ட வீடியோ.

0
588
babloopritiviraj
- Advertisement -

25 வயது இளம் பெண்ணை நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்து இருப்பதாக பரவிவரும் நிலையில் தற்போது அதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பப்லு . தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு 55 வயதாகிறது. தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிரித்திவிராஜ் நடிக்கும் சீரியல்:

இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.

இரண்டாம் திருமணம் :

ந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பப்லு அவர்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின் நிகழ்ச்சியில் பேசிய பப்லு தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் என்னுடைய மனைவி என்று ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணிற்கு 25 வயது தான் ஆகும்.

-விளம்பரம்-

25வயது பெண்ணுடன் திருமணமா ? :

ஏற்கனவே இவருக்கு 25 வயதில் ஒரு மகன் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பப்புலுக்கு தன் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்திருந்தார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது.

பப்லு விளக்கம் :

அதுமட்டுமில்லாமல் முதல் மனைவியை பிரிந்த நிலையில் அவருடைய மகனையும் நடிகர் பப்லுதான் பார்த்துக் கொண்டு வருகிறார். இந்த தகவல் வெளியானதில் இருந்தே பப்லுவை பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பப்லு தான் ஒரு பெண்ணை காதலிப்பது உண்மை தான் அவருடன் திருமணம் செய்துகொள்ள போகிறேன். அதை நான் திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement