‘பயனுக்கு அப்படி ஆனதுக்கு அப்புறம் யாருக்காக நாம சம்பாதிக்க போறோம்’ – தன் ஒரே மகன் குறித்து மனம் திறந்த பப்லு.

0
3572
babloo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். இவருக்கு தற்போது இவருக்கு 55 வயதாகிறது. தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. அதோடு இவர் பல்வேரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசன், அரசி, வாணி ராணி போன்ற பல்வேரு தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரை சீரியல்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.

- Advertisement -

ஆட்டிசம் குறைபாடு உள்ள மகன்:

தன் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது எனத் தெரிய வந்தவுடன் உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை மகனுக்காவே தன்னுடைய மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், பப்லு மற்றும் அவரின் மனைவி இருவரும் மற்றொரு குழந்தையை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய ஒரே மகனையே குறையின்றி பார்த்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தையை சரியாக வளர்ப்பது மட்டும் தான் கடமை என்று மற்ற அப்பாக்களை போல் யோசிக்காமல் தன் மகனைப் போல உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகிறார்.

பிரித்திவிராஜ் அளித்த பேட்டி:

இதுபோன்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களின் தேவைகள், புரிதல்கள் என்ன என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறார் பப்லு. இந்நிலையில் சமீபத்தில் பிரித்திவிராஜ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் திருநங்கை குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். நானும் சமுத்திரகனியும் நீண்ட நாள் நல்ல நண்பர்கள். மாமா, மச்சான் என்று தான் நாங்கள் பேசிக் கொள்வோம். அப்போது சமுத்திரகனி முதன்முதலாக சினிமாவில் நுழையும்போது என் கூடத்தான் படம் பண்ணினார். அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கும் போது தோல்வியடைந்து விட்டது. இதனால் நீதான் காரணம் நான் தான் காரணம் என்று எனக்கும் சமுதிரகணிக்கும் இடையே பிரச்சினை வந்தது.

-விளம்பரம்-

திருநங்கை பற்றி பிரித்திவிராஜ் சொன்னது:

இதனால் இரண்டு ஆண்டுகள் நாங்கள் பேசாமல் இருந்தோம். பின் இரண்டு வருடம் கழித்து சமுத்திரகணி போன் பண்ணி இருந்தார். நான் பேசும்போது நான் ஒரு அரசி என்ற சீரியல் பண்ணலாம் இருக்கிறேன். நீ அதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா என்று கேட்டவுடன் நான் உடனே சரி என்று ஒத்துக்கொண்டேன். இல்லை இதில் பின்னால் பல பிரச்சனைகள் வரும் என்று சொன்னேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நான் நடிக்க தயார் என்று சொன்னேன். பின் திருநங்கைகள் உடைய நடை, உடை, பாவனை எல்லாம் அவர்களிடம் பழகியதன் மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். பின் இந்த சீரியலில் நடித்த போது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

திருநங்கை கதாபாத்திரத்தினால் பிரித்திவிராஜ் பட்ட கஷ்டங்கள்:

நம்ம சாதாரணமா திருநங்கைகள் என்று சொல்லி விட்டோம். ஆனால், அவர்களைப் போல் வாழ்வது ரொம்ப கடினமான ஒன்று. அவர்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்களில் 10% நான் அனுபவித்தேன். எங்கு போனாலும் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். இவனா அவன் என்று விமர்சித்து கிண்டல்,கேலி எல்லாம் செய்வார்கள். பாத்ரூம் கூட போக முடியாது. பின்னாடியே வந்து கிண்டல் பண்ணுவார்கள். இப்படி பல பிரச்சனைகளை அனுபவித்திருக்கிறேன். அதற்குப் பிறகுதான் என்னால் முடிந்ததை அவர்களுக்கு என்று செய்யத் தொடங்கினேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement