உருகி உருகி காதலித்த பப்லுவுக்கு அல்வா கொடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்த ஷீத்தல் – வைரலாகும் புகைப்படம்

0
363
- Advertisement -

பப்லு பிரித்திவிராஜின் காதலி ஷீத்தல் வேறொருவரை திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். இதனிடையே இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தார்கள்.

- Advertisement -

பிரிதிவிராஜ் பற்றிய தகவல்:

இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இவரின் பெயர் ஷீத்தல். முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பிரித்விராஜ் அதை மறுத்தார். அதோடு நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் இதுவரை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்.

பிரிதிவிராஜ்-ஷீத்தல் திருமணம்:

பின் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. அதற்கு பின் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். அதற்குப் பின் இருவரும் இணைந்து நிறைய பேட்டிகள் எல்லாம் கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு சீத்தல், சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் பிரித்திவிராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருந்தார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதற்கு இருவரும் சரியான விளக்கம் கொடுக்கவில்லை.

ஷீத்தல் திருமணம்:

மேலும், சீத்தல்- பிரித்திவிராஜ் பிரிந்து இருப்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. ஆனால், இவர்கள் பிரிவிற்கு காரணம் என்ன தான் தெரியவில்லை. இந்த நிலையில் சீத்தல் வேறு ஒரு திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. சீத்தல் தன்னுடைய நண்பரை தான் திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய கணவரின் முகம் தெரியவில்லை. இவர் திருமணம் செய்திருக்கும் நபர் ஒரு தடகள விளையாட்டு வீரர். ஜிம்மில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடல் அமைப்பு ரவிவாஸ் கிளாசிக்களில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement