தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் அஜித் அவர்கள், நிஜ வாழக்கையில் மிகவும் சாந்தமான ஒரு மனிதர். அத்தோடு தன்னிடம் பழகுபவர்கள் மற்றும் சக நடிகர்களுடன் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வர். ஆனால், பள்ளி பருவ காலத்தில் அஜித் மிகவும் குறும்புகாரராக இருந்துள்ளார்.
அஜித்தின் குணம் பற்றி நடிகர் பப்லு பிரிதிவிராஜ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். நடிகரான பிரிதிவிராஜ் மலையாளம், தமிழ், தெலுகு என்று எண்ணற்ற மொழிகளில் நடித்துள்ளார். அத்தோடு அஜித்துடன் 1998 ஆம் ஆண்டு வெளியான “அவள் வருவாளா ” என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.
அஜித்தும், நடிகர் பப்லு பிரிதிவிராஜின் தங்கையும் சிறு வயதில் ஒரே பள்ளியில் படித்தவர்களாம். அப்போது பப்லுவின் தங்கை தலையில் பபுள்கம் ஓட்டுவது, இரண்டு ஷூக்களையும் ஒன்றாக கட்டிவிடுவது என்று அஜித் என்ற பையன் சேட்டை செய்கிறான் என்று பப்லுவின் தங்கை வீட்டில் சென்று கூறுவாராம். ஆனால், அப்போது பப்லு,அஜித்திடம் கேட்க பயந்துள்ளார்.
பின்னர் அஜித்துடன் பழகிய பின்னர், பப்லு அஜித்திடம் எதற்காக என் தங்கையை இப்படியெல்லாம் செய்தார் என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித், அது நான் இல்லை எங்கள் வகுப்பில் இருக்கும் அஜித் என்ற இன்னோரு பையன் தான் அதையெல்லாம் செய்தான், நான் தான் உன் தங்கையை காப்பாற்றுவேன் என்று அஜித் கூறியுள்ளாராம்.
இந்த ஸ்வரசியமான தகவலை பப்லு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார், அத்தோடு இப்பொது கூட என் தங்கையிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேள் என்று அஜித் அவருடைய போன் நம்பரை கொடுத்துள்ளார் என்று பப்லு நெகிழ்ச்சியாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.