இந்த வயசுல இது உனக்கு தேவையா? ஷீத்தல் பிரிவு குறித்து மனம் திறந்த பப்லு பிரித்திவிராஜ்

0
453
- Advertisement -

இரண்டாம் திருமணம் குறித்து சர்ச்சைகளுக்கு நடிகர் பப்லு அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

தற்போது இவருக்கு 56 வயதாகிறது. கோலிவுட் ஜாம்பவானாக திகழ்ந்த எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து 41 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

- Advertisement -

பிரித்திவிராஜ்-ஷீத்தல் திருமணம்:

இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருந்தது. முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் என்பதால் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள்.

பிரித்திவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருந்தார்கள். இதை பார்த்த பலரும், இவர்கள் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு உறுதியையும் செய்யவில்லை.

-விளம்பரம்-

பிரித்திவிராஜ் பேட்டி:

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக யார் கேள்வி கேட்டாலுமே பிரித்திவிராஜ் கோவமாக பேசி சரியான பதிலை சொல்லாமல் சென்று விடுகிறார். ஆனால், உண்மையிலேயே இவர்கள் பிரிந்து விட்டார்களா? இல்லையா? என்று பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பப்லு பிரித்திவிராஜ், சீத்தல் எனக்கு அறிமுகமாகும் போது அவருக்கு 24 வயது, எனக்கு 55 வயது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகினோம். அதற்குப் பிறகு எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. எங்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்ததால் என்னை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு நான் வாங்கிய ஏச்சுப் பேச்சுகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

இரண்டாம் திருமணம் குறித்து சொன்னது:

55 வயதான உனக்கு 24 வயது பெண் தேவையா? என்றெல்லாம் மோசமாக விமர்சித்து இருந்தார்கள். குறிப்பாக, உனக்கு அந்த விஷயம் தேவைப்படுகிறதா? என்றெல்லாம் திட்டி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் நமக்கெல்லாம் இது தேவையா? என்ற எண்ணமே எனக்கு வந்துவிட்டது. தற்போது நான் என்னுடைய படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அந்தவகையில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த அனிமல் படத்தில் நடித்திருந்தேன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு பின் விஜய் சேதுபதி படத்தில் நடித்திருந்தேன். தெலுங்கு மொழியில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இது தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement