தமிழா தமிழா நிகழ்ச்சியில் பப்லு பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியைப் போல விவாத மேடை ஆகும்.
முதலில் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கியிருந்தார். சில சர்ச்சையின் காரணமாக இவர் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை youtube சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழா தமிழா நிகழ்ச்சி:
வாரம் வாரம் ஒரு தலைப்பை எடுத்து இரு தரப்பினர் எதிர் எதிரே அமர்ந்து வாதங்களை கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில், ஜோதிடத்திற்கு ஆதரவாக நடிகர் அனுமோகன், காதல் சந்தியா ஆகியோர் பேசியிருக்கிறார்கள். ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லை என்று பப்லு, ரேகா நாயர் உட்பட பலர் பேசி இருக்கிறார்கள்.
பப்லு பேசிய வார்த்தை:
அப்போது பப்லு, ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர்கள், என் மகன் சயின்டிஸ்ட் ஆவான் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அவன் இன்னும் பேச கூட ஆரம்பிக்கவில்லை என்று கோபமாக பேசியிருந்தார். உடனே காதல் சந்தியா, எனக்கு பல வருடங்களாக சினிமாவில் வாய்ப்பில்லாததால் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர் ஜோதிடம் நடத்தி வந்தார். அவர் திருத்தணி போயிட்டு வா என்று சொன்னவுடன் நானும் போய் இருந்தேன்.
நடிகர் அனுமோகன் செய்தது:
இப்போது நான் சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நன்றாக இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார். அதற்கு பப்லு, உங்களுக்கு மூளை இருக்கு. கொஞ்சமாக உழைப்பு போட்டீர்கள். திருத்தணி முருகன் எல்லாம் இதற்கு சம்பந்தம் இல்லை என்று சொன்னார். அப்போது நடிகர் அனு மோகன், ஜோதிடம் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்த உடன் பப்லு, ஜோதிடம் எல்லாம் நான்சென்ஸ், நான்சென்ஸ் என்று கோபப்பட்டு கத்த, அனு மோகன் நிகழ்ச்சியை விட்டு எழுந்து சென்றிருக்கிறார்.
பப்லு திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. இதற்கிடையில் இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு செய்து ஒரு மகன் உள்ளார். பின் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பின் இவர் ஷீத்தல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த உறவும் முடிந்தது.