இதுக்கு அப்புறமும் நான் திருந்தலனா மனுஷனே இல்ல – இரண்டாம் மனைவியுடனான பிரிவு சர்ச்சை குறித்து பப்லு வேதனை பேட்டி

0
446
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இவரின் பெயர் ஷீத்தல். முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது.

- Advertisement -

பிரிதிவிராஜ்-ஷீத்தல் திருமணம்:

இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். அதற்குப் பின் இருவரும் இணைந்து நிறைய பேட்டிகள் எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். அப்போது பப்லு, சீத்தல் எனக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்கிறார். என்னுடைய முதல் மனைவி ஏற்படுத்திய காயங்களை எல்லாம் அவர் தான் ஆற்றிக் கொண்டிருக்கின்றார். இந்த வயதிலும் எனக்கு பாடி டிமாண்ட் தேவைப்படுகிறது. அதனால் தான் நான் சீத்தலை திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் பேசி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சைக்களை கிளப்பி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரமாகவே இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

அதோடு சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரித்திவிராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். பின் ஷீத்தல் போட்ட பதிவை பார்த்து ரசிகர் ஒருவர், நீங்கள் பிரிந்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு சீத்தலை லைக்ஸ் கொடுத்து இருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது உண்மையில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

-விளம்பரம்-

பிரித்விராஜ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து அண்மையில் பிரித்விராஜ் அளித்த பேட்டியில், நான் சீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது சீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களா நாங்கள் பிரிந்து விட்டோம் என்கிறீர்கள். நீங்களா நாங்கள் சேர்ந்து விட்டோம் என்கிறீர்கள். நான் ஒரு நடிகன். என்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்வது தான் என்னுடைய வேலை. என்னுடைய அழுக்கு ஜட்டியை நான் பொதுவெளியில் துவைக்க விரும்பவில்லை. நான் அழுக்கு ஜட்டி என்று சொல்வது என்னுடைய தனிப்பட்ட மோசமான விஷயங்களை பற்றி தான்.

பிரிவு குறித்து சொன்னது:

அதைப்பற்றி பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் என்ன செய்தாலும் அதை விமர்சிக்க பத்து பேர் இருக்கிறார்கள். அதை பாராட்டுவதற்கு 10 பேர் இருக்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேச மாட்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படி ஆவேசமாக சீத்தல் குறித்த கேள்விகளுக்கெல்லாம் பப்லு தெளிவாக கூறவில்லை. இதிலிருந்து இவர்கள் இருவரும் பிரிந்தது தெளிவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சீத்தல் விவகாரத்தை தான் இவர் அழுக்கு ஜட்டி என்று கூறுவதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement