தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : பிக் பாஸ் 4-ல் வைல்ட் கார்டு போட்டியாளர் வாய்ப்பை இறுதி கட்டத்தில் இழந்த விஜய் டிவி நடிகர் – பிக் பாஸ் 5ல கன்பார்ம் என்ட்ரியாமே.
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று புகழ்ந்து தள்ளி வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், உங்களின் 11ஆம் வகுப்பு எப்படி போது என்று கேட்டார். அதற்கு அனிகா ‘எனக்கு தெரியாது ‘ என்று பதில் அளித்துளளார். இப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அனிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் ”என்று செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த அனிகா, என்னுடைய ஐடி என்னுடைய பாடி நான் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன் என்று பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.