சினிமா உலகில் பல ஆண்டு காலமாகவே பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். பேபி ஷாலினி தொடங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்கள் மூலம் தல அஜித் குமாருக்கு மகளாக நடித்த அனிகா ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை அனிகாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம்.
நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார் .
இதையும் பாருங்க : சூப்பர் சிங்கரில் பாடிய வீடியோவை பகிர்ந்த சாந்தனு. பங்கமாக கலாய்த்த சிவா.
மேலும், நடிகை அனிகா அவர்கள் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக ஆதரவை பெற்று வருகிறார். இதன் பின் தான் இவர் தமிழில் நடிக்க தொடங்கினார். தற்போது ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘குயின்’ என்ற வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் புடவையில் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தளத்தில் வைரலானது. இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அனிகா.
அந்த பேட்டியில் புடவை அணிந்த அந்த முதல் தருணம் குறித்து பேசிய அவர், குயின் சீரிஸில்தான் முதன் முதலில் புடவை கட்டினேன். ஆரம்பத்தில் புடவை அணிய எனக்குப் பிடிக்கவில்லை. மற்ற உடைகளை அணிவதுபோல வசதியாக இல்லை என்று கூறிக்கொண்டிருந்தேன். பிறகு, திரையில் புடவையில் என்னைப் பார்த்த பிறகு எனக்கே ரொம்ப அழகாகத் தோன்றியது. அதனால்தான் இப்போதெல்லாம் புடவை உடுத்த தொடங்கிவிட்டேன். எல்லோரும் நன்றாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்”என்று கூறியுள்ளார் அஜித்தின் ரீல் மகள் அனிகா.