அத நான் தான் எடுத்துட்டு போய் கொடுப்பேன் – அஜித் -ஷாலினி காதல் வளர்ந்த விதம் குறித்து ஷாலினியின் தங்கை.

0
9173
shamlee
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றனர். சூர்யா ஜோதிகா துவங்கி ஆர்யா – சயிஷா என்று பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் இந்த லிஸ்டில் டாப்பில் இருப்பது என்னவோ அஜித் – ஷாலினி ஜோடி தான். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Stunning new photos of Shalini's sister Shamili turn viral! - Tamil News -  IndiaGlitz.com

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட் ஆகும். இவர்கள் ரெண்டு பேரும் கூட சினிமா உலகில் பிரபலம் ஆனவர்கள்.

- Advertisement -

பேபி ஷாலினியின் சகோதரியான ஷமிலி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார் இந்த படத்தில் அஞ்சலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது அதன் பின்னர் தமிழில் துர்கா தைப்பூசம் செந்தூர தேவி என்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

இறுதியாக விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீர சிவாஜி படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் தமிழில் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷமீலி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷமிலி, அஜித் மற்றும் ஷாலினிக்கு இடையே ஏற்பட்ட காதல் குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement