2014ஆம் ஆண்டு வருடம் தல அஜித் நபிக்க சிறுத்தை சிவா இயக்கிய படம் வீரம். இந்த படம் அப்போது பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. படத்தில் கயல்விழி என்ற பெயரில் ஒரு சின்ன குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தை யார் தெரியுமா? குழந்தையின் உண்மையான பெயர் தெரியுமா?
காயல்விழியின் உண்மையான பெயர் யுவினா. 2008ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் யுவினா. இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
யுவினாவின் அப்பாவிற்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க ஆசை. 2013ஆம் ஆண்டு உறவுக்கு கை கொடுப்போம் என்ற ஒரு சீரியலில் நடித்தார் யுவினா. அதன் பின்னர் படங்களில் நடிப்பதற்கென சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார் அவரது அப்பா.
அதன் பின்னர்தான், வீரம், மஞ்சப்பை, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த ஸ்ட்ராபெரி என்னும் தமிழ் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்தார்.
தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தற்போது மம்மி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார் யுவினா.