ஹாப்பி பர்த் டே பத்ரி – விஜய்க்கு வாழ்த்து சொன்ன பத்ரி பட நடிகர் ரோஹித்.

0
5374
badri
- Advertisement -

இயக்குனர் அருண் பிரசாத் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படம் தம்முடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் தழுவல். இந்த படத்தில் விஜய், பூமிகா, பூபேந்திர சிங், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. மேலும், இந்த படத்தில் வில்லனாக ரோஹித் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பூபேந்திர சிங். இந்நிலையில் பூபேந்திர சிங் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
பூபேந்திர சிங்

பூபேந்திர சிங் அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு ஹிந்தி மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அடையாளம் தெரியாமல் மாறிப்போகி உள்ளார் பத்ரி பட நடிகர் பூபேந்தர் சிங்.
இவர் அஜித் மாதிரி சால்ட் அன்ட் பேப்பர் லுக்கில் உள்ளார். இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பூபேந்தர் சிங் அவர்கள் விஜயுடன் நடித்த அனுபவங்களையும் விஜய் குறித்தும் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். விஜய் பார்ப்பதற்கு குழந்தை மாதிரி. கேமரா முன்னாடி வந்த உடனே அவருடைய நடிப்பும், முகபாவங்களும் வேற மாதிரி இருக்கும். ரொம்ப அமைதியானவர். விஜயின் ஒவ்வொரு டயலாக்கும் வேற லெவல் இருக்கும் என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய்யின் 46வது பிறந்தநாளை ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு கொண்டாடி வருக்கிறார்கள்.

தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement