பிரபு தேவா பல கெட்டப்பில் அசத்தியுள்ள ‘ பஹிரா ‘ எப்படி ? – முழு விமர்சனம் இதோ.

0
1269
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா பிரபு. இவர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் பஹிரா. இந்த படத்தை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கிருக்கிறார். சைக்கோ கொலை திர்ல்லர் படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஆர் வி பரதன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தில் அமிரா தஸ்தூர், காயத்ரி சங்கர், ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா செட்டி, சோனியா அகர்வால், நாசர், சாய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி இருக்கும் பிரபுதேவாவின் பஹிரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் பகிரா என்பவர் ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் நபர். இவர் ஏமாற்றும் பெண்களை குறி வைத்து டெடி பொம்மைகள் மூலம் ஏவி கொலை செய்கிறார். இதற்கிடையில் பகிரா நான்கு பெண்களை காதலித்து கல்யாணம் செய்து அவர்களையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். அவன் ஏன் இப்படி கொலை செய்கிறான்? அதற்கு பின்னால் என்ன காரணம்? பகிராவின் இந்த செயலுக்கு பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

- Advertisement -

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் பகிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய நடிப்பு மிரட்டல். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் படத்தை இயக்குனர் எடுத்து இருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. அதே நேரம் பயங்கர சத்தத்தையும் ஏற்படுத்தி பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டி இருக்கிறது. த்ரில்லர் ஆக்சன் கதை களத்திற்கு பாடல்கள் செட்டாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கதையில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் படம் ஹிட் கொடுத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் பகிரா தொடர்ந்து கொலை செய்வதற்கான காரணம் ஒன்றும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கவில்லை. இதனால் இது படத்திற்கு பெரிய குறையாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

படத்தின் விமர்சனம்:

ஒரு வித்தியாசமான படம் கொடுக்கும் முயற்சியில் பிரபுதேவா இந்த சைக்கோ கொலை திரில்லர் கதை களத்தை கையாண்டு இருக்கிறார். ஆனால், அது அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும். மொத்தத்தில் பல எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு பகிரா ஒரு ஏமாற்றம் தான்.

பிளஸ்:

பிரபுதேவாவின் நடிப்பு மிரட்டல்

படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

சைக்கோ திரில்லர் கொலை படம்

மைனஸ்:

திரைக்கதையில் சுவாரசியம் இல்லை

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்திருக்கலாம்

படத்திற்கு பாடல்கள் செட்டாகவில்லை

தேவை இல்லாமல் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்

மொத்தத்தில் பகீரா – படுதோல்வி

Advertisement