இதுவே திருச்செல்வம் பண்ணி இருந்தா பாராட்டி இருப்பீங்க – பாக்கியாவிற்கு ரசிகர்கள் ஆதரவு

0
710
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா- இனியாவின் காதல் track செல்வதை குறித்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வீட்டின் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று கோபி கேட்கிறார். பின் தாத்தா என்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி தருகிறேன் என்று கூறுகிறார்.

சீரியலின் கதை:

இதை ஏற்றுக் கொண்ட கோபி தற்போது வீட்டின் மதிப்பிற்கு உங்களுடைய சொத்து பத்தாது. இன்னும் 20 லட்சம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இதை சவாலாக பாக்கியலட்சுமி எடுத்துக் கொண்டு ஆறு மாதம் அவகாசம் கேட்டு பயங்கரமாக உழைக்கிறார். அப்போது கையை விட்டுப் போன பழைய கேன்டீன் ஆர்டர் ஒன்று மீண்டும் பாக்யாவிற்கு வருகிறது. அங்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்பதால் பாக்கியா ஆங்கிலம் கற்பதற்காக தனியாக வகுப்புக்கு செல்கிறார். அப்போது பாக்கியாவின் ஸ்கூட்டியை நடிகர் ரஞ்சித் மோதிகிறார்.

-விளம்பரம்-

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

பின் இருவரும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகுப்பில் சந்திக்கிறார்கள். இதன் மூலம் பாக்கியா – ரஞ்சித் இடையே காதல் தொடர்வது போல சீரியலை கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் இனியா தன்னுடன் பயிலும் மாணவனை காதலிப்பது போல காட்டுகிறார்கள். இப்படி சீரியலில் இளமை முதல் வயதானவர்கள் வரை காதலிக்கும் காட்சிகள் வருவதால் நெட்டிசன்கள் இதை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இனியா காதலிக்கும் காட்சிகள் வந்தது.

ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்:

மீண்டும் அவர் காதலிப்பது போல வருவதால் ஒரு பள்ளி மாணவிக்கு இத்தனை காதல் வருமா? என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், கோபி வயதான நிலையில் காதலித்து திருமணம் செய்தால் தவறில்லை. பாக்கியா செய்தால் தவறா? இதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் திருச்செல்வம் செய்திருந்தால் சரி என்று பாராட்டுவார்கள். பாக்கியலட்சுமி சீரியலில் செய்தால் தவறா? என்று பாக்கியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement