அரசியல் வாரிசுடன் காதல், பாலாவை விருப்பமில்லாமல் திருமணம் செய்தாரா முத்துமலர் ? – சர்ச்சையை கிளப்பிய நடிகர்.

0
738
bala
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. சமந்தா, தனுஷ், இமான் போன்ற பிரபலமான நபர்கள் சமீபத்தில் தான் விவாகரத்து அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான பாலா தன் மனைவியை விவகாரத்து செய்து உள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார்.

-விளம்பரம்-

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.
இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார்.

- Advertisement -

பாலாவின் திரைப்பயணம்:

இவர் இயக்கிய முதல் படத்திலேயே மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். அதற்கு பிறகு இவர் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்” உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகளையும், 13 மாநில விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 உலக அளவிலான விருதுகளையும் பெற்று உள்ளது. இதனிடையே இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா- முத்துமலர் விவாகரத்து:

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாலா தன் மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து கிடைக்கப்பெற்று இருக்கிறது. மேலும், பாலாவின் விவாகரத்து குறித்து சோசியல் மீடியாவில் பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவர்களுடைய விவாகரத்துக்கான காரணத்தை குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

பாலா விவாகரத்து குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி:

சினிமாவில் நடிகர், நடிகைகளை கொடுமை படுத்தும் வைக்கும் குணம் கொண்டவர் பாலா. இவருக்கு ஆரம்பத்தில் திருமண ஆசை கிடையாது. பின் உறவினர்கள் வற்புறுத்தலின் போது திருமணம் செய்து கொண்டார். இவர் மதுரை மாவட்டத்தில் தேசிய கட்சியின் தலைவர் மகளை திருமணம் செய்து கொண்டார். அவருடைய பெயர் முத்து மலர். முத்து மலருடைய குடும்பமும் சாதாரண குடும்பம் இல்லை. கோடீஸ்வரக் குடும்பம். பாலாவும் பிரபலமான இயக்குனர். அதோடு இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு பின் பாலா தன்னுடைய மனைவியை ரொம்ப கொடுமைப்படுத்தினார். இவர் குடிப்பழக்கத்திற்கு ரொம்ப அடிமையானவர். அதுமட்டுமில்லாமல் புகைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளவர்.

அதிமுக தலைவர் மகன் உடன் தொடர்பு கொண்ட முத்துமலர்:

மனைவியின் மீது கொஞ்சம் கூட பாசம் இல்லாதவர் பாலா. இதனால் முத்துமலர் மன உளைச்சலுக்கு ஆனார். ஆனால், இவர் கல்லூரியில் படிக்கும்போதே அதிமுக முன்னணி தலைவரரின் மகன் ஒருவருடன் நட்பாக இருந்தார். பின் காதலாக மாறியது. ஆனால், முத்து மலரின் அப்பாவிற்கு பாலா பிடித்துப்போனதால் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். பின் முத்து மலர், தன்னுடைய கணவன் சரியாக இல்லாத காரணத்தினால் மனசு தடுமாறினார். தன்னுடைய பழைய காதலன் அதாவது அதிமுக முன்னணி தலைவரின் மகன் உடன் வெளிநாடு சுற்றுலா சென்றார். இதுகுறித்து பல கிசுகிசுக்கள் வந்தது.

விவாகரத்துக்கு காரணம்:

இதற்காக பஞ்சாயத்தும் நடந்தது. அதில் முத்து மலர் நான் இனிமேல் பாலாவுடன் வாழ மாட்டேன் என்று கூறினார். பாலாவும், நான் முத்து பலருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லி அவருடைய சமுதாயத்தில் பிரித்து வைத்தார்கள். ஆனால், அது சட்டத்திற்கு செல்லாத ஒன்று. 4 வருடங்களுக்கு முன்பே கோர்ட்டில் இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இரண்டு பேருமே அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்பதால் இதை வெளிப்படையாக சொல்லாத இருந்தார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

Advertisement