தன்னுடைய உடல் எடை குறித்து தொடர்ந்து எழும் கேள்விகள் – கடுப்பான பாக்கியலட்சுமி நேஹா.

0
314
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா. தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். தற்போது 19 வயதாகும் இவர் சமீபத்தில் தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

இதற்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் ஒரு சிலரோ, இந்த வயதில் குழந்தை பெத்துக்கு வேணுமா என்று இவரது அம்மாவை விமர்சித்தனர். இதற்கு முன் கூட்டியே பதிலடி கொடுத்திருக்கும் நேகா, குப்பை தனமாக ரிப்லை செய்பவர்கள் பற்றி நான் கவலைபடபோவது இல்லை. எனவே, இங்கே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

சமீபத்தில் நடிகை நேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் என்று போஸ் போட்டிருந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘உங்களின் எடை எவ்வளவு’ என்று கேட்டிருந்தார். இதனால் கடுப்பான நேகா ஏன் எப்போதும் ஒருவரின் எடை பற்றிய கவலை கொள்கிறீர்கள். அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். அது என்ன ஒரு அறிவா ? கிடையாது. இல்லை நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் விஷயமா ? அப்படி என்றால் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுவது முதல் முறை கிடையாது

-விளம்பரம்-
Advertisement