வாழ்வா சாவா என்று சிறுத்தை சிவா தம்பிக்கு நடந்த அறுவை சிகிச்சை – சிகிச்சைக்கு பின் வெளியான அவரின் புகைப்படம்

0
316
- Advertisement -

அறுவை சிகிச்சைக்கு பின் பாலா தனது மனைவியுடன் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருக்கு இந்த படங்களை விட நடிகர் அஜித்துடன் நடித்த வீரம் படம் தான் அதிக பிரபலத்தை கொடுத்தது. ஆனால், அதற்கு பிறகு சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை பல காலமாக காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

நடிகர் பாலா குடும்பம்:

இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது தெரிய வந்தது. சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள்.

பாலா உடல்நிலை குறித்த தகவல்:

இந்த வழக்கில் இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. பின் இவர் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

-விளம்பரம்-

பாலாவுக்கு செய்த அறுவை சிகிச்சை:

அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தனது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார் பாலா. மேலும், அந்த வீடியோவில் பேசிய அவர் ‘இன்னும் சில நாட்களில் பெரிய அறுவை சிகிச்சை இருப்பதாகவும் அந்த சிகிச்சையினால் மரணம் கூட நிகழ வாய்ப்பு இருக்கிறது. தனக்காக இத்தனை காலம் பிராத்தனை செய்து வந்த தன்னுடைய ரசிகர்களுக்கும், நன்பர்களுக்கும் நன்றிகள் என்று உருக்கமுடன் கூறி இருந்தார்.

பாலாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

சமீபத்தில் தான் கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த தகவலை ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் பாலா தனது மனைவியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர் மிகவும் மோசமாக இருக்கிறார். இவர் விரைவில் குணம் அடைந்து வர ரசிகர்கள் பலரும் கமெண்டு போட்டு வருகிறார்கள்.

Advertisement