முதன் முறையாக தன் அம்மாவை வெளி உலகத்துக்கு காட்டிய தாடி பாலாஜி.! புகைப்படம் உள்ளே !

0
922
thadi-balaji

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் புதிய போட்டியாளர்கள். அதில், பாலாஜி – நித்யா தம்பதி சென்றிருப்பது பலரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், ஒரே வீட்டில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thadi Balaji -Nithya

`இந்த வீட்டிலிருந்து வெளியேறும்போது, நித்யா என்னைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கு’ எனச் சொல்லிட்டுத்தான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்தார் பாலாஜி. அங்கே 100 நாள்கள் பாலாஜி இருப்பாரா? நித்யா அவரைப் புரிந்துகொள்வாரா? இதுகுறித்து பாலாஜியின் அம்மா, மீனா என்ன சொல்கிறார்?

பாலாஜி, ‘பிக் பாஸ்’ மேடையில் என்ன பேசினார்னு தெரியாது. அவன் போயிருக்கிறது ஒரு கேம் ஷோ. பர்சனல் லைஃப் வேற, கேம் ஷோ வேற. அவனுக்கு மனைவி, குழந்தைகளோடு சேர்ந்து வாழணும்னு ஆசை. நித்யாதான் அவனை வேண்டாம்னு சொல்றாங்க. மனுஷனா இருந்தா தப்பு பண்றது இயல்புதான். அதை மன்னிச்சு ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போகும்போதுதான் லைஃப் நல்லா இருக்கும். இதை. ரெண்டு பேரும் புரிஞ்சுக்கணும்” என்றபடி தொடர்கிறார் மீனா.

எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. நித்யாவையும் பொண்ணு மாதிரிதான் நினைக்கிறேன். அவங்களைப் பிரிஞ்சதிலிருந்து பாலாஜி என்னோடுதான் இருக்கான். அவன் பொண்ணுன்னா அவனுக்கு உயிர். ‘நான் சம்பாதிக்கிறது எல்லாமே என் பொண்ணுக்காகத்தானே. யாருமே இல்லாமல் யாருக்காக நான் வாழணும்னு’னு வருத்தப்படுவான். அப்பா என்கிற முறையில் வாரத்துக்கு ஒருமுறையாவது அவனிடம் குழந்தையைக் காட்டலாமே. நாங்களும் கேட்டுப் பார்த்துட்டோம். நித்யா அதுக்கு சம்மதிக்கலை. பாலாஜி ஷூட்டிங்கில் இருக்கும்போதும் வாட்ச் பார்த்துட்டே இருப்பான். ‘இது பொண்ணு ஸ்கூலுக்குப் போற டைம்; சாப்பிடற டைம்’ யோசிச்சுட்டிருப்பான். அடிக்கடி நித்யாவுக்கு போன் பண்ணி ‘பாப்பா சாப்பிட்டாளா? ஸ்கூலுக்குக் கிளம்பிட்டாளா?’னு கேட்டுட்டே இருப்பான். அவனுடைய சிந்தனை முழுக்க பொண்ணு பற்றியே இருக்கும். இப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்து எந்தக் குழந்தையாவது பயப்படுமா சொல்லுங்க?” என வருத்தமான குரலில் கேட்கிறார் மீனா.

meena

உன் கோபம், ஈகோ எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுடுனு சொல்லியிருக்கேன். பாலாஜியும் நித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இது நல்ல வாய்ப்பு. யார் தப்பு செஞ்சதுன்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும். என் பையன் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது நித்யாவோடு சமாதானம் ஆகி வந்தால் எனக்குச் சந்தோஷம்தான். நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்” என்கிறார் மீனா.