இது எனக்கு செட் ஆகல, சினிமாவை விட்டு விலகுகிறேன் – பாலாஜி முருகதாஸ் எமோஷனல் பதிவு

0
371
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் தான் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருக்கும் செய்தி தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ உள்ளது. தமிழில் ஆறு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இதில் முதல் பரிசை அர்ச்சனா ரவிச்சந்திரனும், இரண்டாம் பரிசை மணிச்சந்திராவும் வென்றனர்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத நபர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் ‘பிக் பாஸ் 4’ சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால், இவருக்கு நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்.

- Advertisement -

பாலாஜி முருகதாஸ் குறித்து:

அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியில் பாலாஜி டைட்டில் வின்னரும் ஆனார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர். சமீபத்தில் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தான் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டது தான் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபயர் திரைப்படம் :

தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோ நடித்துள்ளனர். மேலும், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். சதீஷ். ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

விழிப்புணர்வு படம்:

மேலும், இத்திரைப்படம் நான்கு பெண்களைப் பற்றிய கதை என்று தெரிகிறது. நாம் பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், இச்சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வளர்கிறார்களா என்பது பற்றி இப்படம் கூறியுள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, இதை ஒரு விழிப்புணர்வு படமாக எடுத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் ஜே.சதீஷ்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

சினிமாவை விட்டு விலகுகிறேன்:

இப்படத்தின் கிளிப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், அப்படத்தில் பாலாஜி முருகதாஸ் செமையாக நடித்திருந்தார். திரில்லிங் கதை அம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படத்தின் ரிலீஸுக்காக வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில்தான் நடிகர் பாலாஜி முருகதாஸ், ஃபயர் படத்தில் நடித்ததற்காக இதுவரை ஒரு சிங்கிள் பேமெண்ட் கூட தரவில்லை. இதனால் நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த முடிவை எடுக்காதீர்கள். மன உறுதியுடன் இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement