ஷிவானி அம்மாவுடன் செல்பி எடுத்த பாலாஜி . என்ன விசேஷம்? வைரலாகும் புகைப்படம்.

0
505
- Advertisement -

சிவானி நாராயணன் அம்மாவுடன் பாலாஜி முருகதாஸ் செல்பி எடுத்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருக்கிறது. தமிழில் ஐந்து வருடங்கள் முடிவடைந்தது தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத நபர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலம் கிடைத்திருக்கிறது. ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகு இவர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்:

இதனை அடுத்து இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை பாலாஜி முருகதாஸ் வென்றார். மேலும்,பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியிருந்தது.

பாலாஜி நடிக்கும் படங்கள்:

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் படத்தில் தான் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் கூட பாலாஜி முருகதாஸ் புதிய கார் ஒன்றை வாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது சின்னத்திரை பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சிவானி நாராயணன் பதிவு:

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸுக்கு சிவானி நாராயணன் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சிவானியின் அம்மாவும் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி முருகதாஸ்- சிவானி நாராயணன் இருவருமே வெளியில் சுற்றுவது என்று தொடர்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சிவானி நாராயணன் குறித்த தகவல்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அதன் பிறகு இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஷிவானி நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பொன்ராம் இயக்கும் படம், நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர்கே பாலாஜியின் படம் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement