பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.
அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை துவங்கி நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 19 தேர்தல் நடந்தது. மேலும், பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருந்தார்கள். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்குகள் எண்ணிகையில் பாஜக முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் உட்பட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பல பிரபலங்கள் போட்டியிட்டு இருந்தார்கள்.
பாலகிருஷ்ணா:
தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு இவர் மூன்றாவது முறையாக எம்எல்ஏவும் ஆகியிருக்கிறார்.
பவன் கல்யாண்:
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவரை ‘பவர் ஸ்டார்ட்’ என்று தான் அழைக்கிறார்கள். இவர் தனது நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறார். மேலும், நடந்த எம்எல்ஏ தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் 70,000 வாக்குகள் அதிகமாக பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறார். அதோடு அவருடைய ஜனசேனா கட்சி போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் முன்னிலையில் தான் இருக்கிறது.
கங்கனா ரனாவத்:
பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். இவர் ஹிந்தி திரைப்படம் மூலம் தான் சினிமா உலகில் தோன்றி இருந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இவர் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் பாஜக சார்பில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிட்ட கங்கனா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
கேரளாவில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்படி பிரபலங்கள் பலருமே தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.