பிறக்க போகும் குழந்தைக்கு சூடு, பெண்களே பெண்கள் ஆடையை அவிழ்ற்க்க சொல்லும் அவலம் – வர்மா படத்தின் மோசமான காட்சிகள்.

0
4407
varma
- Advertisement -

பாலா இயக்கத்தில் துருவ் கதாநாயகனாக அறிமுகமான ”வர்மா” திரைப்படம் ரசிகர்களின் பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் இந்த படம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் கடந்த ஆண்ட பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்றும் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டனர்.

- Advertisement -

அந்த படம் கொஞ்சம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாலா பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் வர்மா திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட்டார்.இந்த படம் நேற்று வெளியானது. ஆனால், இந்த படத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர். அதிலும், விக்ரம், வர்மா படத்தை வேண்டாம் என்று கூறி தனது மகனின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டார். பாலா ஒரு நல்ல இயக்குனர் ஆனால், ரீ-மேக் சிவத்தில் கிடையாது என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

படத்தின் முதல் காட்சியில் கதாநாயகனான வர்மா ஒரு பெண்ணுடன் உல்லாசம் இருக்க வைப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்கிறார் அப்போது திடீரென்று அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகும் வருங்கால கணவர் வந்து விடுகிறார் இதனால் வர்மாவை அந்த பெண் வெளியில் போகச் சொல்லி சொல்கிறார் ஆனால் அவர் மாவோ தன்னை அந்த இடத்தில் கும்பிட்டு போகச் சொல்கிறார் பின்னர் அந்த பெண்ணும் கையை தொட்டு கும்பிட்டு வர்மாவை வெளியில் போகச் சொல்கிறார்.

-விளம்பரம்-

அதே போல வருமா, கல்லூரியில் படிக்கும் போது வர்மா காதலிக்கும் பெண்ணை சில சீனியர் பெண்கள் ராகிங் செய்கிறார்கள். அப்போது மூன்று பெண்கள் அமர்ந்து கொண்டு முதலாமாண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்க்க செல்கிறார்கள். அப்போது ஒரு சில பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் என்று சொல்கிறார்கள். அதனையும் அந்த சீனியர் பெண்கள் கேலி செய்கிறார்கள். இதற்கு எல்லாம் தூக்கி சாப்பிடும் காட்சி போல ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார் படத்தின் நாயகன்.

அப்போது அந்த குழந்தை என் தலை உள்ளே திரும்பி விடுகிறது, கால் மட்டும் வெளியில் வந்து தெரிகிறது. இதனால் அந்த குழந்தையை உள்ளே அனுப்புவதற்காக தன்னிடம் இருக்கும் லைட்டர் மூலம் அந்த குழந்தையின் காலில் சுடு வைக்கிறார் வர்மா. பின்னர் சூடு தாங்க முடியாமல் அந்த குழந்தை காலை இழுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றுவிடுகிறது. இப்படி வர்மா படத்தில் சகிக்க முடியாத முடியாத சில காட்சிகள் இருக்கின்றன. இதனால்தான் இந்த திரைப்படம் ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. உள்ளாகி இருக்கிறது

Advertisement