இந்த வயதில் பொண்ணு கேக்குதா என்று பலருமே தப்பா பேசிருந்தார்கள் என்று பாலு மகேந்திராவின் மகள் வேதனையுடன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்தியா சினிமா திரை உலகில் இயக்குனர் பாலுமகேந்திரா என்று சொன்னால் தெரியாதவர் எவரும் இலர். அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். அவர் இயக்கிய ஹிட் படங்கள் இன்றும் வரை அழியாத காவியங்கள் என்று சொல்லலாம்.

இவர் சமகால தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய பல மொழி திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் , தயாரிப்பாளர், கதை ஆசிரியர், எடிட்டர் என பன் முகங்களை கொண்டவர். இவருடைய சினிமாத்துறை வாழ்க்கை அனைவரும் அறிந்தது தான். ஆனால், பாலுமகேந்திராவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

Advertisement

மகள் சக்தி மகேந்திரா பேட்டி:

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்களை கொண்டிருந்தது. பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். அது அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மௌனிகா ஆவார். மேலும், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக தற்போது திகழும் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரிடம் தான் முதலில் பணியாற்றி இருந்தார்கள். இந்த நிலையில் பாலு மகேந்திரனின் வளர்ப்பு மகள் சக்தி மகேந்திரா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இருந்தது.

சினிமா வாய்ப்பு:

இதனால் என்னுடைய உறவினர் ஒருவர், பாலுமகேந்திராவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் என்னை பார்த்தவுடன், மகளே உள்ள வா என்று அழைத்தார். அங்கு நானும் என்னுடைய அம்மாவும் தான் சென்று இருந்தோம். பின் அவரிடம் நான், எனக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை குறித்து சொன்னேன். அதன் பிறகு என்னுடைய புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பி விட்டார்கள்.

Advertisement

பாலுமகேந்திரா சொன்னது:

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு எங்களை அழைத்தார்கள். அப்போது பாலுமகேந்திரா என் அம்மாவிடம், எனக்கு பெண் குழந்தை இல்லை. பொண்ணு வளர்க்கணும் என்ற ஆசை. இவங்கள பொண்ணாக பார்த்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டார். அன்று 2010 ஆம் ஆண்டில் இருந்து அவர் இறக்கும் வரை நான் அவருடன் இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு 11 வயது.

Advertisement

சர்ச்சை குறித்து சொன்னது:

என்னுடைய அப்பா இறந்த சில மாதத்தில் அவர் என் மீது பாசமாக இருந்தது எனக்கு எமோஷனலாக இருந்தது. என்னை அவர் ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார். பலருமே உனக்கு இந்த வயதில் பொண்ணு கேக்குதான்னு தப்பா எல்லாம் பேசினார்கள். குடும்பத்திலேயே அப்படி பேசினார்கள். இந்த விஷயம் எனக்கும் அவருக்கும் தான் தெரியும். எங்களுடைய உறவை யாருக்குமே புரிய வைக்கணும் என்று அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement