அஞ்சலியை மேடம்னு கூப்பிட்டலனு ஜெய் என்ன செஞ்சார் தெரியுமா ? புலம்பும் தயாரிப்பாளர்.

0
8269
jai-and-anjali
- Advertisement -

-விளம்பரம்-

‘பலூன்’ படம் தயாரிப்பாளர் நந்தகுமார் அவர்கள் இனி சினிமா துறைக்கு வர மாட்டேன் என்று விரக்தியில் கூறியுள்ளார். இதுகுறித்து இணையங்களில் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும்,பலூன் படம் தயாரிப்பாளரின் பெயர் நந்தகுமார். மேலும்,சினிமா துறைக்கு வருவதற்கு முன் இவரை “போஸ்டர் நந்தகுமார்” என்று தான் அனைவருக்கும் தெரியும். ஏன்னா, சென்னை முழுக்க போஸ்டர்கள் ஓட்டுவதில் இவருடைய நிறுவனம் தான் நம்பர் 1. இவர் 1950 ஆம் ஆண்டு இருந்தே போஸ்டர் தொழிலைத் தொடங்க ஆரம்பித்தார். அதாவது சிவாஜி,எம்.ஜி.ஆர். நடிக்கும் காலத்திலிருந்து போஸ்டர் ஒட்ட தொடங்கியவர். தற்போது வரை போஸ்டர் ஒட்டும் துறையில் பிரம்மாண்டமான முறையில் மேம்படுத்தி உள்ளார்.

- Advertisement -
Image result for jai and anjali movie"

மேலும், இவர் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதோடு மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பலூன் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளராக ஆனார். இப்படி தன்னுடைய சிறு வயதில் தொடங்கிய போஸ்டர் தொழில் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் படத்தின் தயாரிப்பில் போட்டார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி பல இடங்களில் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஏனென்றால் ஒரு படத்தின் படப்பிடிப்பு என்று சொன்னாலே ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து சூப்பர் ஸ்டார் விடுவார். அந்த அளவுக்கு சின்சியரான மனிதர் என்று சொல்லலாம். ஆனால், தயாரிப்பாளர் நந்தகுமார் பலூன் படத்தின் மூலம் நடிகர் ஜெய் இடம் படாதபாடுபட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : சபரி மலை போராளிய ஞாபகம் இருக்கா ? அரை நிர்வாண கோலத்தில் கொடுத்துள்ள போஸை பாருங்க.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் அவர் ஜென்மத்துக்கும் ஜெய் செய்ததை மறக்க மாட்டேன் என்றும் கோபத்துடன் கூறியுள்ளார். மேலும், நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி இவர்களின் ஆடம்பர செலவினால் தயாரிப்பாளர் நந்தகுமாரின் பணம் தேவை இல்லாமல் வீண் ஆகியது என்று கூட சொல்லலாம். அதோடு பலூன் படப்பிடிப்பில் அஞ்சலியிடம் படத்தின் சீன்களை சொல்லும் போது அவர்களுடைய பெயரை சொல்லிக் கூப்பிட்டார் இயக்குநர் சினிஷ் விட்டார். உடனே ஜெய்க்கு பயங்கர கோபம் வந்து நீங்கள் எப்படி அவர்களை பெயரை சொல்லி கூப்பிடலாம், ‘மேடம்’ என்று கூப்பிடுங்கள் என்று கண்டபடி சத்தம் போட்டு இருந்தார். பின்னர் அடுத்த நாளே இவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். பின் எப்படியோ ஜெய்யும், அஞ்சலியும் வைத்து படத்தை ஒரு வழியாக முடித்து வெளியே விடப்பட்டது.

ஆனால், இவர்கள் எதிர்பார்த்த அளவு பலூன் படம் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் நந்தகுமார் அதிகமாக பாதிக்கப்பட்டார் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இனிமேல் நான் வாழ்நாளில் சினிமாவில் படம் தயாரிக்கவே மாட்டேன் என்றும் வெறுத்துப்போய் கூறியிருந்தார். மேலும்,அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஜெயினால் தான் இழந்துவிட்டேன் என்று ஆதங்கத்துடன் பேசினார். தமிழ் சினிமா உலகில் இளம் நடிகர்களான ஜெய் மற்றும் அஞ்சலி இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள் என தகவல் அனைவருக்கும் தெரிந்தது தான்.

நந்தகுமார்

மேலும், எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்தே ஜெயிக்கும், அஞ்சலிக்கும் காதல் இருந்தது என்ற பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும்,பலூன் படத்தில் ஜெய் இயக்குனரிடம் நடந்து கொண்டதன் மூலம் இதை உறுதி ஆக்கினார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் பலூன் படத்திற்கு பிறகு இவர்கள் காதல் குறித்து எந்த தகவலும் வரவில்லை. ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது

Advertisement