1997லேயே விஜய்க்கு இருந்த மாஸை பார்த்து வியந்து போய்யுள்ள பாலு மஹிந்திரா – உடன் பயணித்த சீனுராமசாமி சொன்ன ஒரு சுவாரசிய சம்பவம்.

0
346
vijay
- Advertisement -

விஜய் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்த கொண்டிருப்பவர் சீனு ராமசாமி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன், இடம் பொருள் ஏவல். இந்த இரு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் இருக்கிறது.

இதையும் பாருங்க : விக்னேஷ் சிவன் – நயன்தாரா எங்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள் பாருங்க – வெளியான புகைப்படம் இதோ.

- Advertisement -

மாமனிதன் படம் ரிலீஸ்:

ஆகையால், இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வெளியிடுகிறார். மேலும், இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் மாமனிதன் படத்தின் ரிலீஸுக்காக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கின்றனர். இதில் இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சீனு ராமசாமி அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து கூறியிருந்தது, லவ் டுடே படம் வந்த சமயம் அப்போது நானும் என்னுடைய குரு இயக்குனர் பாலு மஹேந்திரன் சாரும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது நான் விஜய்யின் தீவிர ரசிகன். சாலிகிராமம் வழியே செல்லும்போது விஜய் உடைய வீட்டில் வெளியே பயங்கர கூட்டம், போஸ்டர்கள் எல்லாம் பயங்கரமாக இருந்தது.

-விளம்பரம்-

விஜய் குறித்து சீனு ராமசாமி சொன்னது:

அதை பார்த்த கே பாலச்சந்தர் சார், என்னிடம் இவர் இவ்வளவு பெரிய பிரபலத்திற்கு காரணம் என்ன என்று தெரியுமா? என்று கேட்டார். நான் உடனே அவருடைய படங்கள் எல்லாம் ஹிட் அதனால் தான் என்று சொன்னேன். உடனே அவர் அதெல்லாம் இல்லை என்று கூறினார். என்ன சொல்லப் போகிறார் என்று நான் குழப்பத்திலேயே இருந்தேன். பின் அவரிடம் என்ன சார் அதற்கு காரணம்? என்று கேட்டேன்.

விஜய் பிரபலத்திற்கு காரணம்:

அதற்கு, அவருடைய முகம் பூனை முகம். அதாவது புலி, சிறுத்தை இன வகையைச் சேர்ந்த முகம். பூனை, குதிரை குடும்பம் முகம் உள்ளவர்கள் ராஜ யோகமாக இருப்பார்கள். அவர்களை குழந்தைகளுக்கு எளிதாகப் பிடித்து விடும். அதனால் தான் இவ்வளவு பிரபலத்தில் இருக்கிறார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement