Real Life பாரதி கண்ணம்மா. குழந்தையை நிராகரித்த பேட்ட நடிகர். DNA டெஸ்ட் கேட்ட மனைவி

0
441
nawasuddin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கி கடந்த 3ஆம் தேதிதான் நிறைவடைந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணம்மா கழுத்தில் தாலியை பாரதி காட்டுவார் அதோடு தொடரும் என முடிந்தது.

-விளம்பரம்-

DNA டெஸ்ட் :

ஆனால் இந்த சிரியல் முடிவை நெருங்குவதற்கு முன்னர் பல மாதம் DNA டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதனால் இந்த சீரியலின் Trp எகிறியது. ஆனால் அதற்கு பிறகு இந்த தொடர் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து. இதனால் ரசிகர்கள் பலரும் பாரதிக்கு dna டெஸ்ட் எடுத்து தொலைங்க என்ற அளவிற்கு கடுப்பாகிவிட்டனர். பாரதிக்கு DNA டெஸ்ட் எடுத்துவிட்டால் இந்த தொடர் முடிந்துவிடும் என்பதால் இந்த தொடரை ஜவ்வாக இழுத்து கொண்டே சென்றனர்.

- Advertisement -

முடிக்கு வந்த பாரதி கண்ணம்மா :

முடிவில் DNA டெஸ்ட் எடுக்கப்பட்டு டெல்லிக்கு சென்ற பாரதி டி என் ஏ டெஸ்டை வாங்கி பார்க்கிறார். அதில் ஹேமா, லட்சுமி இருவரும் தனக்கு பிறந்த குழந்தைகள் என்ற உண்மை தெரிய வருகிறது. பின் அவர் கண்ணம்மாவை திட்டி அசிங்கப்படுத்தியதெல்லாம் நினைத்து அழுகிறார். அதற்கு பிறகு சில குளறுபடிகள் ஏற்பட்டு கண்ணம்மா அவரது சொந்த ஊருக்கு செல்கிறார். அவரை சமாதனப்படுத்த செல்லும் பாரதி என இழுத்து கடைசியாக பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 4ஆம் தேதி முடிந்து தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2 நடந்து வருகிறது.

நடிகர் நவாசுதீன் :

இப்படிபட்ட நிலையில் தான் பாரதி கண்ணம்மா சிரியலில் வருவது போல DNA டெஸ்ட் எடுக்கும் ஒரு நிகழ்வு தற்போது சினிமா பிரபலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைப்படத்தில் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் நாவாசுதீன். இவர் கமலஹாசன் இயக்கிய ஹேராம் படத்தில் உதவி இயக்குனராக இருந்தார். மேலும் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சி படத்தில் நீலம் கருதி நீக்கப்பட்டதாக சமீபத்தில் கொடுத்திருந்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

போலீஸில் புகார் :

இந்த நிலையில் தான் நவாசுதீன் சித்திக்கின் தாய் வெர்சோவா மும்பை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் அந்த புகாரில் யாரென்றே தெரியாதா ஆலியா என்பவர் நவாசுதீனின் மனைவி என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய வீட்டில் அத்துமீறி நுழைந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் , தனனை தக்கவாத வார்தைகளில் திட்டுவதாகவும் அவரின் மீது நடவடிக்கை எடுக்கும் படி குற்றம் சாட்டியுள்ளார்.

DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் :

இந்நிலையில் ஆலியா சித்திக் நீதிமன்றத்தில் தனக்கும் நடிகர் நவாசுதீன் அவர்களுக்கும் பிறந்த இரண்டாவது குழந்தையை நவாசுதீன் மறுப்பதாகவும், இதனால் தன்னுடைய குழந்தைக்கும் நவாசுதீன் அவர்களுக்கும் DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும், இந்த பிரச்னை முடிவுக்கு வந்தபின் நவாசுதினை தான் விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். நவாசுதீன் தன்னுடைய மனைவி ஆலியா சித்திக்கை பிரிந்து வாழ்வதினால் இருவருக்கும் சொத்து விவகாரம் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையாகி வருகிறது.

Advertisement