விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.
பின் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோகினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.
பல திருப்பங்களுடன் சீரியல் :
பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ரசிகர்களும் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என்று காத்து காத்து 3 மாதங்களாக சென்று விட்டது. மேலும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பலவிதமான ட்விட்களையும் இந்த சீரியலில் கொடுத்து கதையை நகர்த்தி வந்தார்.
முடிவடைந்த சீரியல் :
இப்படி பட்ட நிலையில் தான் பாரதி கண்ணம்மா சீரியல் நேற்று அதிகாரபூர்வமாக முடிவை நெருங்கியது. இப்படி பட்ட நிலையில் இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் புத்தம் புதிய தொடரான “மகாநதி” சீரியல் பாரதி கண்ணம்மா மாற்றாக வர இருப்பதாக ஆங்காங்கே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி அந்த சீரியல் தனியாக உருவாக்க இருக்கும் சீரியல் என்று தெரிந்துள்ளது. இந்நிலையில் பரபராப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் உண்மையிலேயே நேற்று முடிவடைந்தது.
தொடரும் என முடிந்த சீரியல் :
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் காட்சியில் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.ஜே.பாலாஜி, பிக் பாஸ் பிரபலம் ஷிவின் என பலரும் கலந்து கொண்டனர். கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணம்மா கழுத்தில் தாலியை பாரதி காட்டுவார அதோடு தொடரும் என முடிந்தது. மேலும் பாரதி கண்ணம்மா முதல் சீசன் ஆத்திரப்பூர்வமாக நேற்று முடிவடைந்த நிலையில் அடுத்த சீசன் ஹிண்ட்டாக நேற்று பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டு இவர்கள் யார் என்ற கேள்வி எழுதியிருந்தார்.
தமிழகத்தின் Favourite #BarathiKannamma -வின் புதிய அத்தியாயம்.. 😍
— Vijay Television (@vijaytelevision) February 3, 2023
பாரதி கண்ணம்மா 2 – பிப்ரவரி 6 முதல் திங்கள் – சனி வரை இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BarathiKannamma2 #VijayTV #VijayTelevision pic.twitter.com/rJvlnnBm4G
அதிகாரப்பூர்வ பாரதிகண்ணமா 2 ப்ரோமோ :
இப்படி பட்ட நிலையில் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2 அதிகாரப்பூர்வமான ப்ரோமோ இன்று வெளியாகி சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. இந்த பாரதி கண்ணம்மா சீரியலின் சீசன் 2வில் பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிப்பதாகவும் கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடரப் போகிறார் கூறியுள்ளார். இந்த ப்ரோமோ வைரலாகவே பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.