பாரதி கண்ணம்மாவில் இருந்து லீட் ரோல் விலகலா ? இவர் போயிட்டா சீரியலின் கதி ? முடிச்சிடுவாங்கலோ.

0
4384
barathi
- Advertisement -

பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து கண்ணம்மா விலகுவதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி உள்ளது. இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை விறுவிறுப்புடனும் பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல் ஆகவே மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் பாரதி.

-விளம்பரம்-

பின் இவர்கள் இருவரையும் பிரித்து வெண்பா விளையாடுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா மிகவும் போராடுகிறார். தன் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை மாமியார் சௌந்தர்யா எடுத்துச் செல்கிறார். இன்னொரு குழந்தையை கண்ணம்மா வளர்க்கிறார். பின் தன்னுடைய இன்னொரு குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள கண்ணம்மா போராடுகிறார். பாரதி கண்ணம்மாவை ஏற்பாரா?பாரதி எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பான்? வெண்பாவின் சதி செயல் பாரதிக்கு தெரியவருமா? என்று பல ஆர்வத்துடன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடிக்கிறார். இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாகவும், இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் தான் பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஷினி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு பிறகு கண்ணம்மா கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Barathi Kannamma | 9th to 14th August 2021 - Promo - YouTube

ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இது வதந்தியாக இருக்குமோ? இல்லை உண்மையா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். மேலும், இதை பார்த்து பலரும் தயவுசெய்து கண்ணம்மா கதாபாத்திரத்தில்இருந்து ரோஷினியை மாற்றாதீர்கள். ரோஷினிதான் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் என்று கமென்ட் போட்டு வருகிறார்கள். உண்மையிலேயே ரோஷினி சீரியலை விட்டு விலகுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement