அப்போ இவங்க ரெண்டும் போரும் லவ் பண்றங்களா – நடிகையுடன் காரில் அருண் வெளியிட்ட புகைப்படம். ரசிகர்கள் போட்ட கமெண்ட்ஸ்.

0
588
arun
- Advertisement -

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : மியூசிக் டீச்சராக இருக்கும் போது 7 ஆம் வகுப்பு படித்த சசி குமார் சொன்ன விஷயம் – சுப்ரமணியபுரம் வாய்ப்பு குறித்து ஜேம்ஸ் வசந்தன் சொன்ன உருக்கமான கதை.

பாரதி கண்ணம்மா அருண் :

இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கு முன் பாரதியின் தம்பி அகிலன் விலகி இருந்தார். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் பாரதி, ஹேமாவிற்காக விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் :

இதனால் கண்ணம்மா மிகவும் சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம், வெண்பாவை திருமணம் செய்துகொள்ள வந்திருக்கும் ராக்கி என்பவர் ஏமாற்றுக்காரர் என்பது தெரியவருகிறது. இதனாலே வெண்பாவும் அவருடன் இருக்கும் சாந்தியும் அந்த உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்ததா :

இந்த நிலையில் நடிகர் அருண் பிரசாத்துக்கு விரைவில் திருமணம் என்ற செய்திகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏற்கனவே நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கும் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவுக்கும் தான் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை.

வைரலாகும் புகைப்படம் :

மேலும், இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் அருண் மற்றும் அர்ச்சனாவும் காரில் எடுத்தோகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்போ இவங்க ரெண்டு பெரும் காதலிப்பது உண்மை தானா என்று கூறி வருகின்றனர். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சின்னத்திரை சீரியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement