ஒரு வழியா DNA ரிப்போர்ட் வந்துடிச்சி – ரிசல்ட்டை பார்த்து கதறி அழுது பாரதி – என்னனு வந்து இருக்கு தெரியுமா ?

0
498
- Advertisement -

பாரதி கண்ணம்மாவின் டி என் ஏ ரிசல்ட் குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
barathi

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். பின் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலையில் தான் வகித்து வருகிறது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பாரதி டி என் ஏ டெஸ்ட்டை எடுக்கிறார். ஹேமா, லட்சுமி தன்னுடைய குழந்தைகளா? என்பதை பரிசோதிக்க முயற்சிக்கிறார். வெண்பாவிற்கு ரோகித்துடன் திருமணம் நடக்கிறது.

உண்மையை அறியும் ஹேமா:

ஆனால், வெண்பாவிற்கு ரோகித்தை பிடிக்காமல் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்து விடுகிறார். இருந்தும், வெண்பாவை ரோகித் காதலிக்கிறார். இன்னொரு பக்கம், ஹேமாவிற்கு கண்ணம்மா தான் தன்னுடைய சொந்த அம்மா என்ற உண்மை தெரிகிறது. இதனால் ஹேமா தன்னுடைய அம்மாவான கண்ணம்மா உடனே சென்று விடுகிறார். இதையெல்லாம் தாங்கிக் கொள்ளாமல் பாரதி புலம்பி அழுகிறார். ஆனால், ஹேமா தன்னுடைய அப்பா யார்? என்று கண்ணம்மாவிடம் கேட்கிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

கண்ணம்மா எந்த பதிலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் ஹேமா தன்னுடைய அப்பாவை கண்டுபிடிக்க செல்கிறார். அப்போது வெண்பா, ஹேமாவை கடத்த ஆள் வைக்கிறார். பின் ஹேமா காணாமல் போனது பாரதியின் குடும்பத்திற்கும், கண்ணம்மாவிற்கும் தெரியவந்தது. மேலும், அவர்கள் ஹேமாவை தேடி அலைகிறார்கள். வெண்பா, ஹேமாவை தீர்த்து கட்ட சொல்லி சொல்கிறார். ஆனால், அந்த கடத்தல் கும்பல் ஹேமாவை கைமாற்றி விட்டு விடுகிறார்கள். இன்னொரு பக்கம், பாரதி டி என் ஏ ரிசல்ட்டை வாங்குவதற்காக டெல்லிக்கு செல்கிறார்.

டிஎன்ஏ ரிசல்ட் குறித்த ப்ரோமோ:

இந்த நிலையில் பாரதி டிஎன்ஏ ரிசல்ட் குறித்த ஒரு முக்கிய ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, டெல்லிக்கு சென்ற பாரதி டி என் ஏ டெஸ்டை வாங்கி பார்க்கிறார். அதில் ஹேமா, லட்சுமி இருவரும் தனக்கு பிறந்த குழந்தைகள் என்ற உண்மை தெரிய வருகிறது. பின் அவர் கண்ணம்மாவை திட்டி அசிங்கப்படுத்தியதெல்லாம் நினைத்து அழுகிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. ஆனால், பாரதிற்கு ஹேமா காணாமல் சென்றது தெரியாது. இதனால் பாரதி உண்மையை அறிந்து கண்ணம்மாவை ஏற்பாரா? ஹேமாவை கண்டுபிடிப்பாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement