ராஜா ராணி சீரியல் நடிகையை மணக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் – ரிஷப்ஷன் புகைப்படங்கள் இதோ

0
885
barathi
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரை திருமணம் செய்ய உள்ளார் சீரியல் நடிகை. விஜய் டிவி சீரியல்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு விதவிதமான சீரியல்களை நாள்தோறும் ஒளிபரப்பி வருகின்றனர்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதிலும் பல சீரியல்கள் விறுவிறுப்புகளுடனும், பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் டிவியில் பல எதிர்பார்ப்புகளுடன் சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரவீன். இவர் இந்த சீரியலுக்கு முன்னே விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்நிலையில் நடிகர் பிரவீன் அவர்கள் சீரியல் நடிகை ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருக்கிறார். மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா அவர்கள் ராஜா ராணி முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வருகின்றார்கள். சமீபத்தில் தான் மதன்- ரேஷ்மா, சபானா- ஆர்யன், சித்து- ஸ்ரேயாஆகியோர் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். இந்த வரிசையில் தற்போது விஜய் டிவி பிரபலம் பிரவீன்– ஐஸ்வர்யா இணைந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement