‘திமிரு, நிஜ வாழ்க்கையில் மோசமான நபர் இவர்’ – அட்வைஸ் செய்தவருக்கு பரினா அளித்த பதிலால் திட்டி தீர்த்த ரசிகர்.

0
448
Fareena
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. அதில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரேட்களில் ஒன்றாகவும் பாரதி கண்ணம்மா உள்ளது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். மேலும், சீரியல்களுக்கு ஹீரோ, ஹீரோயினி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் வில்லிகள் தான். வில்லி இருந்தால் மட்டுமே தான் ஹீரோ ஹீரோயின்களுக்கு அங்கு வேலை. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் வெண்பா கதாபாத்திரம் என்று சொல்லலாம். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

- Advertisement -

பரீனா சின்னத்திரை பயணம்:

இவர் இதற்கு முன்னாடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நடிகையாக மிரட்டி வருகிறார். இதனிடையே இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தார்.அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பாராட்டைப் பெற்றார்.

மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பரீனா:

பின் பரினா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தவுடன் பலரும் தங்கள் சந்தோஷத்தை ஷேர் பண்ணி இருந்தார்கள். இவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீண்டும் பரினா சீரியலில் வெண்பாவாக கலக்கி கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் வேறு ஒரு சேனலுக்கு சென்றிருக்கிறார். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடர் அபி டெய்லர். இந்த சீரியலில் ரேஷ்மா, மதன் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த தொடரில் பரினா நடிக்கிறார்.

-விளம்பரம்-

பரீனா நடிக்கும் சீரியல்கள்:

இப்படி பரினா சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படம், வீடியோ என எல்லாத்தையும் பதிவிட்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்து வருவார். அந்த வகையில் தற்போது பரினா கொடுத்திருக்கும் பதில் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. அப்படி என்ன பதில் கொடுத்திருக்கிறார் என்றால், சமீபத்தில் பரினா ஒரு பாடலுக்கு ரியாக்சன் செய்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.

பரீனாவை விமர்சித்த ரசிகர்:

இதை பார்த்த ரசிகர் ஒருவர் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்களது குழந்தையுடன் இருங்கள் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். அதற்கு பரினா, நீங்கள் வருத்தப்படுவதை நிறுத்துங்கள். அவன் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறான் என்று கமென்ட் போட்டு இருக்கிறார். பின் பரினாவின் இந்த பதிவை பார்த்த பதிவிற்கு மற்றொரு ரசிகர், இவர் மிகவும் திமிர் பிடித்தவள், இவருடைய பக்கத்தில் எதையும் கமன்ட் செய்யாதீர்கள், இவளை பிளாக் செய்துவிடுங்கள். ரசிகர்கள் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்பதை மறந்துவிட்டாள். எப்போதும் ரசிகர்களிடம் திமிராக தான் பதில் கூறுகிறார். நிஜ வாழ்க்கையில் மிகவும் மோசமான குணம் கொண்டவர் என்று பதிவிட்டு இருக்கிறார் என்று விமர்சித்து பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement