கருவில் இருந்த போதே தன் குழந்தைக்கு நடந்த விஷயம் – கண்ணீருடன் கூறிய பரீனா. இதோ வீடியோ.

0
769
farina
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சீரியல் என்றாலே ஹீரோ, ஹீரோயின்,வில்லி. சீரியலில் ஹீரோ- ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு வில்லிக்கும் இருக்கிறது. ஹீரோ- ஹீரோயினுக்கு இணையாக வில்லி கதாபாத்திரம் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹீரோயினை விட வில்லியின் இம்பாக்ட் தான் சீரியலில் பயங்கரமாக இருக்கும். அதிலும் சமீப காலமாக கதாநாயகிகளை விட வில்லிகள் தான் மக்கள் மத்தியில் அதிகம் இடம் படித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
farina

அந்த வரிசையில் விஜய் டிவியில் மோசமான வில்லியாக திகழ்பவர்கள் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா வெண்பா. இவர்களையெல்லாம் ரசிகர்கள் திட்டித்தீர்த்த நாளே இருக்கிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவை நிஜயத்திலும் பலர் வில்லியாகவே தான் பார்த்து வருகின்றனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

வெண்பாவாக மிரட்டும் பரீனா :

இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இருப்பினும் குழந்தை பிறந்த சில மாதங்கள் வரையிலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார் பரீனா. இதனால் இவர் மீது சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்களால் பல விதமான நெகட்டிவ் கமன்ட்சுகள் கூட வந்தது.

விஜய் டெலிவிசன் விருது வழங்கும் விழா:

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கர்ப காலத்தை என்ஜாய் செய்யும் விதமாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக நீருக்கு அடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். கு

-விளம்பரம்-

கருவில் இருந்த போது தன் குழந்தை பட்ட கஷ்டம் :

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே பரீனா பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். தற்போது இவரது கதாபாத்திரத்தால் இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லியாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் டெலிவிசன் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னோட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

அர்ச்சனா அம்மாவின் எமோஷனல் பேச்சு:

இதில் பேசிய பரீனா “வெண்பா ரோலை பயங்கரமாக திட்டுவார்கள். நான் நிறைமாத கர்ப்பிணியாக நடித்த போது என் குழந்தையையும் சேர்த்து திட்டுவார்கள்” என குறிப்பிடுகிறார். இவரை தொடர்ந்து பேசிய அர்ச்சனாவின் அம்மா,என் மகளை எல்லோரும் வீட்டில் திட்டுகிறார்கள். பரினாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால், என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாமே ஆகணும். அதாவது சீரியல் வில்லி என்பது வெறுப்பு நடிப்பு மட்டும் தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது இவ்வளவு வெறுப்புகளை கொட்டாதீர்கள். உங்களுக்காக தான் அவர்கள் அப்படி நடிக்கிறார்கள். என் மகளுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

Advertisement