கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். பின் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர்.இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது. பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் விவகாரத்திற்கு தீர்வு கேட்ட ரசிகர் :
இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் பரீனா, இந்த விவகாரம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா.
பரீனாவின் கணவர் மற்றும் மகன் :
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி படு வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தி வந்தார். இதனால் இவர் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.
ஹிஜாப் விவகாரம் குறித்து பரீனா :
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ‘ஹிஜாப் பிரச்சனைக்கு எதாவது தீர்வு சொல்லுங்க’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பரீனா ‘ஹிஜாப் போட்றதோ போட்டு வைக்கறதோ ஒருத்தவங்களோட தனிப்பட்ட விருப்பம். கண்டவர்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் மனைவியிடம் வேலை செய்ய கட்டளை போட யாராலும் அனுமதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.