நார்மல் டெலிவரியா, சிசேரியனா ? பிரசவத்திற்கு பின் செல்ஃபீயை பதிவிட்டு பாரீனா சொன்ன தகவல்.

0
446
fareena
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில மதங்கங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.

- Advertisement -

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் பரீனா சமீபத்தில் தனது வயிற்றில் கூட அழகா மருதாணி வைத்து வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்தி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-119.png

இந்த போட்டோ ஷூட்டை தொடர்ந்து வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். இந்த நிலையில் பரீனாவிற்கு ஆண், குழந்தை பிறந்துள்ளது. அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருக்கிறார் பரீனா. அதே போல குழந்தை பிறந்த பின் பெட்டில் இருந்தபடியே எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, நானும் என் மகனும் நன்றாக இருக்கிறோம். மேலும், நார்மல் டெலிவரி தான் என்றும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement