அகிலனை தொடர்ந்து விலகிய கண்மணி – இனி பாரதி கண்ணம்மாவில் இந்த ஜீ தமிழ் நடிகை தான் அஞ்சலி.

0
1184
Anjali
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனிடையே வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் சீரியலில் இருந்து அவருடைய காட்சிகள் மட்டும் காண்பிக்காமல் இருந்தார்கள்.

- Advertisement -

விலகிய அஞ்சலி :

வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினா மீண்டும் வில்லியாக சீரியலில் என்றி கொடுத்து விட்டார். இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன். இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து வந்தார். பின் பாரதியின் தம்பி அகிலை அஞ்சலி திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் இவர் தன் அக்காவை பழிவாங்குவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி இருந்தார்.

ஜீ தமிழுக்கு சென்ற கண்மணி :

பின் அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் போது மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக நின்று வருகிறார். இப்படி பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சில வாரங்களாகவே பாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலியை பார்க்க முடியவில்லை. இது குறித்து ரசிகர்கள் பலரும் கேட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கண்மணி களமிறங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

உறுதி செய்த இயக்குனர் :

அதே போல் அதே தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் கண்மணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. இதனை அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் கண்மணி விலகி விட்டாரா? இல்லையா? என்று பல கேள்விகள் எழுந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் சீரியலின் அடுத்த மாற்றம் குறித்து பதிவிட்டு இருந்தார்.

புதிய அஞ்சலி :

இப்படி ஒரு நிலையில் கண்மணி வெளியேறியதை தொடர்ந்து தற்போது அவருக்கு பதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் புகழ் நடிகை அருள்ஜோதி இனி பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி ரோலில் நடிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஞ்சலி கணவராக நடித்து வந்த அகிலன் வெளியேறியதை தொடர்ந்து தற்போது அஞ்சலியும் மாற்றப்பட்டு இருப்பது சீரியலுக்கு மிகப்பெரிய சரிவு தான்.

Advertisement