என்னது , பாரதி கண்ணம்மா சீசன் 2 ரெடியா ? கண்ணம்மா பகிர்ந்த புகைப்படத்தால் அதிர்ந்த ரசிகர்கள்.

0
528
vinusha
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது அடுத்த பக்கம் குறித்து வினுஷா போட்ட இருக்கும் சூசக பதிவு தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். பின் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலையில் தான் வகித்து வருகிறது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பாரதி டி என் ஏ டெஸ்ட்டை எடுக்கிறார். ஹேமா, லட்சுமி தன்னுடைய குழந்தைகளா? என்பதை பரிசோதிக்க முயற்சிக்கிறார். வெண்பாவிற்கு ரோகித்துடன் திருமணம் நடக்கிறது.

உண்மையை அறியும் ஹேமா:

ஆனால், வெண்பாவிற்கு ரோகித்தை பிடிக்காமல் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்து விடுகிறார். இதை தொடர்ந்து வெண்பா ஜெயிலுக்கு சென்றுவிட்டார். இன்னொரு பக்கம், ஹேமாவிற்கு கண்ணம்மா தான் தன்னுடைய சொந்த அம்மா என்ற உண்மை தெரிகிறது. இதனால் ஹேமா தன்னுடைய அம்மாவான கண்ணம்மா உடனே சென்று விடுகிறார். இதையெல்லாம் தாங்கிக் கொள்ளாமல் பாரதி புலம்பி அழுது அவர்களை தேடி சென்றுகொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இரண்டாம் பாகமா :

இப்படி ஒரு நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் சமீபத்தில் வந்தது இதில் கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைகள் தன்னுடையது தான் என்று பாரதிக்கு தெரிய வந்தது. இதனால் இந்த சீரியல் இத்துடன் நிறைவு பெறும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.இந்த நிலையில், ரசிகர் ஒருவர் கண்ணம்மாவின் போட்டோவை சுவரில் வரைந்து கண்ணம்மா என எழுதி இருந்தார்.அந்த போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்த, இந்தத் தொடரின் நாயகி வினுஷா coming soon என எழுதி பதிவிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, புதிய கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கலாம் என்றும், அதனை சூசகமாக வினுஷா இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement