பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2 சீரியலின் மகா சங்கமம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதையும் பாருங்க : இதான் புரொமோஷனா? டிடியால் கடுப்பான ரன்பீர் கபூர் – வைரலாகும் வீடியோ இதோ.
பாரதி கண்ணம்மா சீரியல்:
இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கு முன் பாரதியின் தம்பி அகிலன் விலகி இருந்தார். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் வெண்பா- ரோகித் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது.
சீரியலின் கதை:
அதேபோல் ஹாஸ்பிடலில் ராமன், ஜானகியம்மா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜானகி அம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் போகிறார் பாரதி. இதனால் சீரியல் கொஞ்சம் டல்லாகவே சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது. இதை சரி செய்யும் விதமாக பாரதி கண்ணம்மா தொடர் வரும் வாரத்தில் மகாசங்கம் எபிசோட்டில் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது.
மகா சங்கமம்:
அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் ராஜா ராணி 2 சீரியல் உடன் தான் மகா சங்கமம் இணைகிறார்கள். தற்போது ராஜா ராணி சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த மகா சங்கமம் ஒரு மணிநேரம் நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி2- பாரதி கண்ணம்மா தொடர் இணைய உள்ளது. இந்த இரண்டு சீரியலின் இயக்குனரும் பிரவீன் தான்.
பாரதி கண்ணம்மா-ராஜா ராணி 2:
ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி நடித்துக்கொண்டிருந்தபோதும், ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா நடித்துக் கொண்டிருந்த போதும் மகாசங்கம் எபிசோடை ஒளிபரப்பி இருந்தார்கள். அந்த எபிசோடு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சீரியலில் வினுஷா மற்றும் ரியா தான் இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மகா சங்கமம் ஃபுள் எனர்ஜி உடன் வரும் வாரத்தில் வரப்போகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.