இதான் புரொமோஷனா? டிடியால் கடுப்பான ரன்பீர் கபூர் – வைரலாகும் வீடியோ இதோ.

0
592
dd
- Advertisement -

இதுக்கு பேர்தான் புரமோஷனா? என்று டிடி மீது ரன்பீர் கபூர் கோபப்பட்டு இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் அனைவரும் அழைப்பார்கள். இவர் 23 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-

மேலும், டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது இவர் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : டேய், உங்க பாகுபலியே பொன்னியின் செல்வன பாத்து எடுத்தது தான் – பாகுபலிக்கு முன் ராஜமௌலி போட்ட பழைய டீவீட்டை போட்டு கலாய்க்கும் தமிழ் ரசிகர்கள்.

டிடி நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் காபி வித் காதல், துருவ நட்சத்திரம், ஜோசுவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் உடன் டிடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. அதேபோல் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் ரன்வீர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளிவந்து இருந்தது. அதாவது, இவர்கள் இருவருமே Shamshera படத்தின் புரமோஷனுக்காக மும்பைக்கு சென்றிருந்தார்கள்.

-விளம்பரம்-

Shamshera படத்தின் புரமோஷன்:

இந்நிலையில் ப்ரமோஷன் விழாவில் டிடி மீது ரன்பீர் கபூர் கோபப்பட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ஆக்சன் சீக்குவென்ஸூக்காக ரெடியாகி வந்த ரன்பீர், டிடியின் காஸ்ட்யூமை பார்த்து என்ன இது? என்கிறார். அதற்கு எனக்கு டான்ஸ் என்று தான் சொன்னாங்க சார் ஒரு நிமிஷம் சார் நான் ரெடியாகுகிறேன் என்றேன். அதுக்கு முன்னாடி டான்ஸ் ப்ளீஸ் சார் என்கிறார் டிடி. பின் சரி ஓகே என்று சொல்லிவிட்டு இருவரும் டான்ஸ் ஆடுகிறார்கள்.

டிடியை திட்டிய ரன்பீர்:

டான்ஸ் ஆடி முடித்ததும் ஆக்சனுக்கு அழைக்கிறார் ரன்பீர். அதற்கு டிடி என்னால் செய்ய முடியாது என்று சொல்லி Shamshera படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என்ற விஷயத்தை தமிழில் சொல்கிறார். இது ஒன்றும் புரியாமல் திரு திருவென விழித்த ரன்பீர் டென்ஷனாகி இதெல்லாம் ஒரு பிரமோஷனா? என்று கோபத்துடன் டிடியை திட்டி அனுப்புகிறார். இந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

ஷம்ஷேரா படம்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். சஞ்சு படத்திற்கு பிறகு நான்கு வருட இடைவெளிக்குப் பின் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் படம் ஷம்ஷேரா. இதில் ரன்பீர் கபூருடன் சஞ்சய்தத், வாணி கபூர், அஷூதோஸ் ராணா, ரோனித் ராய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கரண் மல்கோத்ரா இயக்கியிருக்கிறார். இந்த படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பல் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளது.

Advertisement