இவ்ளோ வெள்ளையா இருந்த ரோஷினியவா சீரியல்ல அப்படி கருப்பா காமிச்சாங்க, எது தான் உண்மை ?

0
782
roshini
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். இவர் மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜுவல்லரி, ஆனந்தம் சில்க்ஸ் போன்ற பல விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமானார். ஆனால், இவருக்கு பாரதி கண்ணம்மாவில் வாய்ப்பை தேடி தந்தது ‘‘ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி’’ என்ற குறும்படம் தான். இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை ரோஷினி.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அணைத்து இல்லதரிசிகள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார். இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. காதல், பாசம், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் தழுவல். மேலும், இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் தான் ரோஷினி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இவர் நடித்த முதல் சீரியலே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஹிட்டானது. அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. உண்மையாகவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தவுடன் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் விலகிய காரணம்:

மேலும், சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று சொன்னவுடன் குஷி ஆகி விட்டார்கள். புதிய கண்ணம்மாவாக நடித்திருக்கும் வினுஷா பார்ப்பதற்கு அப்படியே ரோஷினை போல இருப்பதால் மக்கள் அவரை சீக்கிரமாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும், சினிமா பட வாய்ப்புக்காக சீரியலில் இருந்து விலகிய ரோஷினி தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸாக இருந்தது.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி:

சமீபத்தில் தான் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த முறை நிகழ்ச்சியில் ரோஷினி அருமையாக விளையாடி வருகிறார்.இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம்.

வைரலாகும் ரோஷினி லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்து பலரும் வாயைப் பிளந்து விட்டார்கள். அப்படி என்ன அந்த புகைப்படத்தில் இருக்கிறதென்றால், ஆள் அடையாளமே தெரியாமல் ரோஷினி மாறிப் போயிருக்கிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி கருப்பாக இருந்தார். ஆனால், இந்த புகைப்படத்தில் வெள்ளை வெளேன்னு வெளிநாட்டு காரி போலிருக்கிறார். இதை பார்த்து உண்மையாகவே இதுதான் இவருடைய கலரா? இல்லை இது ஃபோட்டோஷாப்பா? கண்ணம்மா சீரியலில் அவருக்கு முகத்தில் சாயம் பூசி விட்டார்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement