விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.
பின் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.
பல திருப்பங்களுடன் சீரியல் :
பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ரசிகர்களும் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என்று காத்து காத்து 3 மாதங்களாக சென்று விட்டது. மேலும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பலவிதமான ட்விட்களையும் இந்த சீரியலில் கொடுத்து கதையை நகர்த்தி வந்தார்.
முடிவை நெருங்கும் பாரதி கண்ணம்மா :
இப்படி பட்ட நிலையில் இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் புத்தம் புதிய தொடரான “மகாநதி” சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மாற்றாக வர இருப்பதாக ஆங்காங்கே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி அந்த சீரியல் தனியாக உருவாக்க இருக்கும் சீரியல் என்று தெரிந்துள்ளது. இந்நிலையில் பரபராப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் உண்மையிலேயே முடிவை நெருங்கி உள்ளது.
இதுதான் கிளைமாக்ஸ் :
தற்போது பிரிந்துள்ள பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இணைந்து திருமணம் நடக்க இருப்பதாகவும் அப்படி அந்த காட்சியோடு இந்த சீரியல் முடிவடையும் என கூறப்படுகிறது. இப்படி பட்ட நிலையில் தான் பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மங்களான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து யார் இவர்கள்? என்று பாரதி கண்ணம்மா சீசன் 2 என பதிவிட்டுள்ளார்.
சீசன் 2 ஹீரோ – ஹீரோயின் :
இதன் மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் 1 முடிவடைவதையும் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்க இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் நிலையில் பாரதி கண்ணம்மா சீசன் 2வில் பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிப்பதாகவும் கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடரப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறியாது.