‘பரபரப்பான பல திருப்பங்களுடன்’-பாரதி கண்ணம்மா Climax இது தானா?

0
653
barathi
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதி கிளைமாக்ஸ் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
barathi

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலையில் தான் வகித்து வருகிறது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. ஹேமா தான் தன் தங்கை என்ற உண்மை லக்ஷ்மிக்கு தெரிய வருகிறது.

சீரியலின் கதை:

இன்னொரு பக்கம், வெண்பா கர்பம் ஆகிறார். இவருடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோகித் தான் என்பது வெண்பாவிற்கு தெரியும். ஆனால், அந்த உண்மையை மறைத்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வெண்பா ஒரு திட்டம் தீட்டுகிறார். அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பாரதி டி என் ஏ டெஸ்ட்டை எடுக்கிறார். ஹேமா, லட்சுமி தன்னுடைய குழந்தைகளா? என்பதை பரிசோதிக்க முயற்சிக்கிறார். அது மட்டும் இல்லாமல் டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் இரு குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என்றால் வெண்பாவை கல்யாணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார் பாரதி.

-விளம்பரம்-

சீரியலின் டீவ்ட்ஸ்:

குழந்தை ஹேமாவிற்கு தன்னுடைய உண்மையான அப்பா பாரதி இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் அவர் அதிர்ச்சி ஆகிறார். ஹேமாவிடம் எந்த உண்மையையும் சொல்ல முடியாமல் பாரதியின் மொத்த குடும்பமும் திகைத்து நிற்கிறது. இன்னொரு பக்கம், வெண்பாவுடைய திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், வெண்பா, பாரதியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் சீரியலின் கிளைமாக்ஸ் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சீரியலின் கிளைமாக்ஸ்:

அதாவது, அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பாரதி டிஎன்ஐ டெஸ்ட் எடுத்திருக்கிறார். அதற்கான ரிப்போர்ட் நாளை மாலை வந்து விடும் என மருத்துவர் கூறுகிறார். இன்னொரு பக்கம் வெண்பா திருமண கோலத்தில் தயாராக இருக்கிறார். ரிபோட்டில் என்ன வரப்போகிறது? பாரதி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெண்பா – ரோகித் திருமணம் நடக்குமா? என்ற பரபரப்பின் உச்சத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement